காஸ்ட்லியான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஒரு மாசத்துக்கே இத்தன பேர் வாங்கறாங்களா! இந்தியா ஏழை நாடு இல்ல முருகேசா

எஸ்யூவி (SUV) ரக கார்கள் மீதான இந்திய மக்களின் காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதிலும் விலை உயர்ந்தவையாக இருந்தாலும் கூட, ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களை இந்திய மக்கள் வாங்கி குவிக்கின்றனர். நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் இது தொடர்ந்துள்ளது.

ஆம், நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இதில், அதிகம் விற்பனையான டாப்-5 ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

Toyota Fortuner Legender

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியலில், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) முதலிடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 2,825 ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 2,581 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Skoda Kodiaq

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 151 ஆக இருந்த ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 241 ஆக உயர்ந்துள்ளது. இது 60 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) 3வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 185 ஆக இருந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 240 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எம்ஜி க்ளோஸ்ட்டர் கார் விற்பனையில் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ள கார்களும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், எஞ்சிய 2 கார்களும் விற்பனையில் தடுமாறியுள்ளன. இந்த பட்டியலில் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) கார் 4வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜீப் நிறுவனம் 400 மெரிடியன் கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 127 ஆக குறைந்துள்ளது. இது 68 சதவீத வீழ்ச்சியாகும். அதேபோல் 5வது மற்றும் கடைசி இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) கார் விற்பனையில் 41 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 155 ஆக இருந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 91 ஆக குறைந்துள்ளது. ஜீப் மெரிடியன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகிய 2 கார்கள் தவிர, எஞ்சிய 3 கார்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்திருப்பது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை காட்டிலும், ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் அவற்றின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது என்பது, ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 16, 2023, 14:24 [IST]
English summary
Top 5 full size suv august 2023 toyota fortuner leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+