கண்ணுக்கு எட்டன தூரம் வரை எதிரியே இல்ல! தனிக்காட்டு ராஜா என்பதை அழுத்தம் திருத்தமா நிரூபித்த ஃபார்ச்சூனர்!

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் முதல் இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,967 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,876 ஆக குறைந்துள்ளது. இது 5 சதவீத வீழ்ச்சி ஆகும். வீழ்ச்சி என்றாலும் கூட, இந்த பட்டியலில் டொயோட்டா ஃபார்ச்சூனர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Skoda Kodiaq

வரும் மாதங்களில் இந்த வீழ்ச்சியில் இருந்து டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) கார், 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 106 ஆக இருந்த எம்ஜி க்ளோஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 172 ஆக உயர்ந்துள்ளது.

இது 62 சதவீத வளர்ச்சி ஆகும். இது சிறப்பான வளர்ச்சிதான் என்றாலும் கூட, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, எம்ஜி க்ளோஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. எதிர்காலத்தில் எம்ஜி க்ளோஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என்பதுதான் அது.

Jeep Meridian

ஏனெனில் எம்ஜி நிறுவனம் க்ளோஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த புதிய மாடலின் சோதனை ஓட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. எனினும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை, எம்ஜி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் வீழ்த்துமா? என்பதெல்லாம் சந்தேகம்தான்!

சரி, இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) கார், 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 76 ஆக இருந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 150 ஆக உயர்ந்துள்ளது. இது 97 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 138 ஆக இருந்த ஸ்கோடா கோடியாக் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 126 ஆக குறைந்துள்ளது. இது 9 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை ஜீப் மெரிடியன் (Jeep Meridian) பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 344 ஆக இருந்த ஜீப் மெரிடியன் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 101 ஆக குறைந்துள்ளது. இது 71 சதவீத வீழ்ச்சி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர்! இந்த பட்டியலில் உள்ள எஞ்சிய 4 கார்களின் விற்பனை எண்ணிக்கையையும் ஒன்றாக சேர்த்தால் கூட, டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நெருக்கமாக கூட வரவில்லை. எனவே இந்தியாவின் ஃபுல் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் என்பதை டொயோட்டா ஃபார்ச்சூனர் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 23:49 [IST]
English summary
Top 5 full size suv cars november 2023 toyota fortuner leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+