டொயோட்டா ஃபார்ச்சூனர் கால் தூசிக்கு கூட எந்த காராலும் வர முடியல! இதை வீழ்த்த இனி ஒருத்தன் பொறந்துதான் வரணும்!
இந்திய சந்தையில் ஃபுல் சைஸ் எஸ்யூவி (Full Size SUV) ரக கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவை விலை உயர்ந்தவையாக இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களை வாங்கி வருகின்றனர்.
இந்த சூழலில் நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்களில் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான டாப்-5 ஃபுல் சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த பட்டியலில் வழக்கம் போல டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,935 ஆக இருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2,874 ஆக குறைந்துள்ளது. இது 2 சதவீத வீழ்ச்சியாகும்.
இந்த பட்டியலில் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster), 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 311 ஆக இருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 201 ஆக குறைந்துள்ளது. இது 35 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த பட்டியலில் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 71 ஆக இருந்த ஸ்கோடா கோடியாக் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 191 ஆக உயர்ந்துள்ளது. இது 169 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 123 ஆக இருந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 191 ஆக உயர்ந்துள்ளது. இது 55 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியலில் முதல் 2 கார்கள் வீழ்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த 2 கார்கள் வளர்ச்சியை பெற்றுள்ளன. இதற்கிடையே இந்த பட்டியலின் 5வது மற்றும் கடைசி இடத்தை, ஜீப் மெரிடியன் (Jeep Meridian) பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 507 ஆக இருந்த இந்த காரின் விற்பனை, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 90 ஆக சரிந்துள்ளது. இது 82 சதவீத வீழ்ச்சியாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த செக்மெண்ட்டின் கிங் என்பதை டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளது. அது சிறிய அளவிலான வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, மற்ற கார்களின் விற்பனை எண்ணிக்கை எதுவும், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அருகே கூட வரவில்லை.
இந்திய சந்தையில் ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) காரின் விற்பனை நிறுத்தப்பட்ட பிறகு, டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு சரி நிகரான போட்டி மாடல் எதுவும் இல்லாமல் போய் விட்டது என்பதையே இந்த விற்பனை எண்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதன் காரணமாக வரும் மாதங்களிலும் டொயோட்டா ஃபார்ச்சூனரின் ஆதிக்கமே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








