இந்த தீபாவளிக்கு இதுல ஏதாச்சும் ஒன்ன சூஸ் பண்ணிக்கோங்க! இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 சிறப்பு பதிப்பு கார்கள்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள கார் மாடல் அதிக அலங்காரம் மற்றும் அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனில் அதுவே சிறப்பு பதிப்பு (Special Edition) வாகனமாகும். இந்த சிறப்பு பதிப்புகளுக்கு இந்தியாவில் சற்றும் குறைச்சல் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் சிறப்பு பதிப்பு கார் மாடல்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அவற்றில், டாப் ஐந்து கார் மாடல்களைப் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வரும் விழாக் காலத்தை புதிய காருடன் கொண்டாட திட்டம் போட்டு இருப்பவர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் உங்களுக்கு தொகுத்து வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. வாருங்கள் நம்முடைய இந்த லிஸ்டில் இந்தியாவின் பெஸ்ட் டாப் 5 சிறப்பு பதிப்பு கார்கள் எவை என்பது பற்றிய தகவலைக் காணலாம்.

Top 5 special edition cars

நிஸான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிசன் (Nissan Magnite KURO Special Edition): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் கார் மாடல் இருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்கள் ஒன்றாகவும் இது இருக்கின்றது.

இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பே மேக்னைட் குரோ ஆகும். இதனை மிக சமீபத்திலேயே நிஸான் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. அதாவது, வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டே இந்த சிறப்பு பதிப்பை அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 8.27 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Nissan magnite kuro special edition

அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. இதற்கான கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். வழக்கமான மேக்னைட் மாடலைக் காட்டிலும் இது மிக மிக அழகான தேர்வாக உங்களுக்கு கிடைக்கும். எக்ஸ்வி எம்டி, டர்போ எக்ஸ்வி எம்டி மற்றும் டர்போ எக்ஸ்வி சிவிடி ஆகிய மூன்று உயர் நிலை தேர்வுகளில் மட்டுமே குரோ சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா அமேஸ் எலைட் எடிசன் (Honda Amaze Elite Edition): எலைட் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் ஓர் சூப்பரான பதிப்பே இந்த அமேஸ் எலைட் ஆகும். ரூ.9.04லட்சம் தொடங்கி ரூ.9.86லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்கப்படுகின்றது. விஎக்ஸ் எனும் உயர் நிலை தேர்வில் மட்டுமே இந்த ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

Honda city elegant and amaze elite editions

ரெனால்ட் நிறுவனத்தின் அர்பன் நைட் லிமிடெட் எடிசன் (Renault Urban Night Edition): ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் க்விட், கைகர் மற்றும் ட்ரைபர் ஆகிய கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அனைத்து கார் மாடல்களிலும் அர்பன் நைட் லிமிடெட் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ரெனால்ட். வழக்கமான பதிப்பைக் காட்டிலும் ரூ. 15 ஆயிரம் அதிக விலையில் இந்த சிறப்பு பதிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கும்.

அட்டகாசமான வெளிப்புற நிறம், கூடுதல் சிறப்பு அலங்கார அணிகலன்கள் என ஏகப்பட்ட அம்சங்களைத் தாங்கிய பதிப்பாகவே ரெனால்ட் நிறுவனத்தின் இந்த அர்பன் நைட் லிமிடெட் எடிசன் காட்சியளிக்கின்றது. இதேபோல், சிறப்பம்சங்களும் இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ஸ்மார்ட் மிர்ரர் மானிட்டர், அட்வான்ஸ்டு ஆம்பியன்ட் லைட், இலுமினேட்டட் ஸ்கஃப் பிளேட்டுகள் உள்ளிட்டவையே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Mg astor blackstorm limited edition

எம்ஜி அஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிசன் (MG Astor BlackStorm): கருப்பு நிறத்தை யாருக்குதான் பிடிக்காது. இந்த ஸ்பெஷல் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட ஓர் கார் மாடலே இந்த பிளாக்ஸ்டார்ம் எடிசன் ஆகும். எம்ஜி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலாக அஸ்டர் மாறி இருக்கின்றது. இதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இந்த சிறப்பு தேர்வை எம்ஜி இந்திாயவில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

காரின் உட்பக்கம், வெளிப்பக்கம் என பெரும்பாலான பகுதிகளில் கருப்பு நிறத்தையே எம்ஜி பயன்படுத்தி இருக்கின்றது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், தேன் கூடு போன்ற அமைப்புக் கொண்ட கருப்பு நிற க்ரில், கருப்பு நிற அலாய் வீல், சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் என ஏகப்பட்ட அலங்கார பொருட்களை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.

Skoda kushaq onyx plus edition

ஸ்கோடா குஷாக் ஓனிக்ஸ் பிளஸ் (Skoda Kushaq Onyx Plus): ஸ்கோடா நிறுவனமும் வரும் பண்டிகைக் காலத்தை சிறப்பிக்கும் விதமாக இந்த சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், சிறப்பு பதிப்பை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை மட்டுமே அது வழங்குகின்றது. ரூ. 11.59 லட்சமே அதன் விலை ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமில்லைங்க, இன்னும் நாட்டில் பல்வேறு சிறப்பு பதிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், மினி ஷேடோவ் எடிசன் கார், ஸ்கோடா ஸ்லேவியா மேட் எடிசன் கார், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸின் ஹைனெஸ் சிபி350 லெகசி எடிசன் மற்றும் சிபி350ஆர்எஸ் மாடலின் புதிய ஹியூ எடிசன் உள்ளிட்டவையும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆக்டிவா ஸ்கூட்டர் கூட தற்போது லிமிடெட் எடிசன் சிறப்பு பதிப்பில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 13, 2023, 10:40 [IST]
English summary
Top 5 special edition cars in india magnite kuro to skoda kushaq onyx plus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X