போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த டாடா... நெக்ஸான், பன்ச் ரெண்டு காரும் ரவுண்டு கட்டி அடிக்குது!
இந்தியர்களுக்கும், எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கும் இடையே இருக்கும் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு எஸ்யூவி ரக கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். இது நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதமும் தொடர்ந்துள்ளது.
நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் டாடா நெக்ஸான் (Tata Nexon) முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 15,871 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,916 ஆக குறைந்துள்ளது.

இது 6 சதவீத வீழ்ச்சியாகும். இருப்பினும் இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் முதலிடத்தை தன்வசப்படுத்தி அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 12,131 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,383 ஆக உயர்ந்துள்ளது.
இது 19 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார், 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 11,324 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 13,393 ஆக உயர்ந்துள்ளது. இது 18 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 6,455 ஆக இருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 12,185 ஆக உயர்ந்துள்ளது. இது 89 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 13,321 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 11,814 ஆக குறைந்துள்ளது. இது 11 சதவீத வீழ்ச்சியாகும்.
எனினும் ஹூண்டாய் க்ரெட்டா கார், கூடிய விரைவில் இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின்பு, ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பட்டியலில் டாடா நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 29,299 ஆக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








