உங்க குடும்பம் மட்டுமல்ல பக்கத்து வீட்டு குடும்பமும் சேர்ந்து போகலாம்! கியா கார்னிவெல் குறித்த டாப்5 தகவல்கள்
கியா நிறுவனம் சர்வதேச அரங்கில் தனது கார்னிவல் (Kia Carnival) நான்காம் தலைமுறை பேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் இந்தியாவிற்கு வருவது குறித்து நாம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம். இந்த கார் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கெள்ள வேண்டிய 5 விஷயங்கள் (Top 5 Things) என்ன என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
கியா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கார்னிவல் காரின் விற்பனையை நிறுத்தியது. இந்த காரை விரைவில் அப்டேட் செய்து வெளியிடப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் சர்வதேச அளவில் கியா கார்னிவெல் காரின் நான்காம் தலைமுறை கார் (2024 Kia Carnival Car) அறிமுகப்படுத்தப்பட்டது. கொரியாவில் இந்த கார் பொதுமக்கள் மத்தியில் அறிமுகமாகி இந்த காருக்கான புக்கிங்கும் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கியா நிறுவனம் தனது கேஏ 4 என்ற கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் 2024-ம் ஆண்டு கியா கார்னிவெல் என்ற பெயரில் நான்காம் தலைமுறை காராக இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்களைப் பற்றி காணலாம்.
அறிமுகம்: புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஆரம்பத்தில் கியா சோனட் ஃபேஸ்லிஃப்ட் கார் சர்வதேச அரங்கில் அறிமுகமாக போகிறது. அதன் பிறகு கியா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா கார்னிவல் கார் இருக்கும் (2024 Kia Carnival launch) என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன் அப்டேட்கள்: புதிய கியா கார்னிவெல் காரில் முன்பக்கம் உள்ள கிரில் பகுதி குரோம்பட்டைகள் (Chrome Slated Grill) கொண்ட வித்தியாசமான டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் எல் வடிவங்களுடன்கூடிய ஹெட்லைட் (L Shaped Headlight), புதிய எல்இடி டிஆர்எல்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் (Redesigned Bumper) அதில் புதிய ஏர் இன்டெக் பகுதியும், ஃபாக்ஸ் அலுமினியம் ஸ்கிட் பிளேட் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்பகுதியை பொருத்தவரை புதிய எல்இடி டெய்ல் லைட் கனெக்டெட் லைட் பாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட செல்டோஸ் காரில் எப்படி இருக்கிறதோ அதேபோல இந்த காரிலும் இருக்கிறது. இதுபோக பின்பக்க பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு 19 இன்ச் அலாய் வீலுடன் (19 inch Alloy wheel) இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

உட்புற கட்டமைப்பு மற்றும் அம்சங்கள்: புதிய தலைமுறை கியா கார்னிவெல் காரில் பல்வேறு சீட்டிங் ஆப்ஷன்களிடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மார்க்கெட்டில் 11 சீட்டர் காரும் (11 Seater Kia Car) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் 12.3 இன்ச் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 12.3 இன்ச்க்கு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது.
எச்விஏசி (HVAC) கண்டரோல்களும் எச்யூடி (HUD) ஸ்டைலில் ரீஸ்டைல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதில் டேஷ்போர்டுகள் அப்டேட் செய்யப்பட்டு டிஜிட்டல் கீயுடன், இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இது போக வட்ட வடிவிலான டிரைவ் செலக்டர், 8 ஏர் பேக்குகள், அடாஸ் சிஸ்டம் , 14.6 இன்ச் கொண்ட பின்பக்க என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் ஆகியவை இந்த காரில் உள்ளன.

இன்ஜின்: சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகமான புதிய கியா கார்னிவல் காரில் 3.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் ஆகிய இன்ஜின்கள் பொருத்தப்படுவது உறுதி செய்துள்ளது. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது 2.2 லிட்டர் (2.2liter Diesel Engine) 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 200 பிஎஸ் பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் (Automatic Torque Converter) கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் நல்ல பவர்ஃபுல் காராக இருக்கும்.

போட்டிகள்: இந்தியாவில் இன்று கார்னிவல் கார் இருக்கும் அதே கேட்டகிரியில் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) கார் இருந்தாலும், இந்த காருக்கு நேரடி போட்டியாக அந்த கார் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த காருக்கு நிகரான அளவில் வேறு எந்த கார்களும் மார்க்கெட்டில் இல்லை. இந்த காரை கார் என்று சொல்வதை விட கப்பல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சொகுசு அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது.
இந்தியாவில் கியா கார்னிவெல் புதிய தலைமுறை காரின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். இந்த காரை குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காரராக கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த காரில் விற்பனைக்கு வரும்போது நிச்சயம் இதன் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். எண்ணிக்கையில் அடிப்படையில் மற்ற கார்களை விட குறைவாக விற்பனையானலும் இது பிரீமியம் செக்மென்ட் கார் என்பதால் இதன் விலை ஜாஸ்த்தியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் தனது கார்னிவெல் காரின் புதிய தலைமுறை காரை இந்தியாவிற்கு கொண்டு வருவது இந்திய மக்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்று உள்ளார்கள். என்பதை காட்டுகிறது. இந்த காரின் விலை அதிகமாக இருந்தாலும் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதை காரணம் சொல்வதைவிட சாலையில் ஓடும் கப்பல் என்றே நாம் சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









