2024ம் ஆண்டில் கார் காதலர்களுக்கு செம்ம வேட்டை காத்திருக்கு! மாருதி-டாடா போட்டி போட்டு அறிமுகம் செய்ய போறாங்க!
இந்திய கார் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் ஆண்டாக வருகின்ற 2024 ஆம் ஆண்டு அமைய இருக்கின்றது. ஏனெனில், இந்த ஆண்டில் ஏகப்பட்ட புதுமுக கார்கள் விற்பனைக்கு வர இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. வரவிருக்கும் இந்த கார் மாடல்களில் ஒரு சில ஏற்கனவே இந்தியர்களின் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் கவர தொடங்கிவிட்டன.
இந்தியர்களின் எதிர்பார்ப்பை கவர்ந்திருக்கும் அந்த கார் மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய கார் பிரியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் டாப் ஏழு கார் மாடல்கள் பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift): இந்தியர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலையே ஹூண்டாய் நிறுவனம் தற்போது புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே இந்த புதுப்பிக்கப்பட்ட க்ரெட்டாவின் சோதனை ஓட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
எனவே எப்போது வேண்டுமானாலும் இந்த கார் விற்பனைக்கு வந்துவிடலாம் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. இந்தியாவில் இந்த புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பித்தலின்கீழ் இந்த காரில் ஏகப்பட்ட மாற்றங்களை ஹூண்டாய் செய்திருக்கின்றது. குறிப்பாக, மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை இந்த காருக்கு அது வழங்கி இருக்கின்றது.
இத்துடன், காரின் இன்டீரியரும் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், நவீன கால அம்சங்கள் பலவற்றை இந்த காரில் எதிர்பார்க்கலாம். இதுமாதிரியான தகவல்களின் காரணத்தினாலேயே பலர் புதிய ஹூண்டாய் க்ரெட்டாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift): இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக செல்டோஸ் காட்சியளிக்கின்றது. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஹூண்டாய் க்ரெட்டாவை போலவே இந்த காரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு களமிறங்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
கியா நிறுவனமும் இந்த காரின் சோதனை ஓட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதுப்பித்தலின் கீழ் இந்த காரை சற்று பெரியதாகவும், அதிக நவீன அம்சங்களைக் கொண்டதாகவும் கியா மாற்றி இருக்கின்றது. இதனால்தான் இந்த காரும் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதவிர, புதிய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இந்த கார் மாடலில் காஸ்மெட்டிக் மாற்றங்களையும் அது செய்திருக்கின்றது.
டாடா கர்வ் (Tata Curvv): மேலே பார்த்த இரண்டு கார் மாடல்களும் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் ஏற்கனவே பரீட்சையமான கார் மாடல்களாகும். ஆனால், டாடா கர்வ் என்பது இதுவரை நடைமுறை வாழ்க்கையில் யாரும் பார்த்திராத கார் மாடல் ஆகும். இதுவரை டாடா இந்த காரை கான்செப்ட் மாடலாக மட்டுமே காட்சிப்படுத்தி இருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்த கார் மாடலை டாடா அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் இந்த காரை எலெக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூன்று விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
ஆனால், இவற்றில் முதலில் எலெக்ட்ரிக் வெர்ஷன் கர்வே இந்திய சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னரே ஒன்றன் பின் ஒன்றாக மற்ற வெர்ஷன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. கர்வ் இவி வெர்ஷன் ஓர் முழு சார்ஜில் 500 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்தியாவின் மிக சிறந்த ரேஞ்ஜ் தரும் மற்றும் அழகிய மின்சார காராக இது இருக்கும்.
மஹிந்திரா தார் 5 டோர் வெர்ஷன் (Mahindra Thar 5-Door): மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் தார்-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 3 கதவுகள் அமைப்பைக் கொண்ட தார் காரே இப்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியர்கள் பலரின் எதிர்பார்ப்பாக 5 டோர் வெர்ஷன் இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பை விரைவில் மஹிந்திரா தீர்த்து வைக்க இருக்கின்றது. ஆமாங்க, அடுத்த ஆண்டே இந்த காரை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் இந்த காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்த காரின் சோதனை ஓட்ட பணிகளும் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift): மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த புகழ்மிக்க கார் மாடலாக எக்ஸ்யூவி 300 இருக்கின்றது. இந்த கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனே விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது. இதுவும், தாரை போலவே 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் மாடல்களுடன் சேர்த்து மஹிந்திரா மொத்தமாக 5 கார் மாடல்களை வரும் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
மாருதி சுஸுகியின் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் (New-Gen Maruti Suzuki Swift & Dzire): இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக ஸ்விஃப்ட் காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடல் மற்றும் டிசையர் ஆகிய இந்த இரு கார் மாடல்களின் புதய தலைமுறை வெர்ஷனையே மாருதி சுஸுகி அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இந்த கார்களை சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற வாகன கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் புதிய எஞ்ஜினாக இந்த கார்களில் 1.2 லிட்டர் இசட் சீரிஸ் 3 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் அம்சம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்விஃப்ட் மற்றும் டிசையரைக் காட்டிலும் இவை அதிக ரேஞ்ஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக மிக அதிகம் ஆகும். இவற்றில் சில ஏற்கனவே விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் கார் மாடல்களாக காட்சியளிக்கின்றன. ஆகையால், அவற்றின் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையை மேலும் இரட்டிப்பாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








