10 லட்ச ரூபாய் வச்சிருக்கீங்களா? இதுல ஒரு காரை வாங்கிபோடுங்க! ஏரியால மாஸ் காட்டலாம்!
இந்திய மக்கள் மத்தியில் தற்போது பவர்ஃபுல்லான கார்களை வாங்குவதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதிக திறன் கொண்ட கார்களை நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதால் மக்கள் அந்த கார்கள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இப்படியாக ரூபாய் 10 லட்சத்துக்கு குறைவாக அதிக பவர் கொண்ட கார்கள் மார்க்கெட்டில் விற்பனை ஆகி வருகிறது அது பற்றி தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300: இந்த பட்டியலில் முதலாக இருக்கும் கார் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 கார் தான். இதன் டர்போ ஸ்போர்ட் வேரியன்ட் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 128 எச்பி பவரையும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக இருக்கிறது.

இந்த காரின் இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 9.25 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை இந்திய மக்கள் பல விரும்பி வாங்கி வருகின்றனர். அதிக பவர் கொண்ட காரை விரும்பும் மக்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
டாடா நெக்ஸான்: இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் கார், டாடா நெக்ஸான் கார் ஆகும். இந்த கார் தற்போது தான் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகத்துக்கு தயாராகி வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 118 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக இருக்கிறது

இந்த கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கிறது. டாடா நிறுவனத்திற்கு மிகப்பெரிய விற்பனை வளர்ச்சியை கொண்டு வந்த கார் இதுதான். இந்த கார் தற்போது மார்க்கெட்டில் ரூபாய் 9.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. டாடா ஆல்ட்ராஸ் டர்போ இன்ஜின் காரில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா அல்ட்ராஸ்: டாடா நிறுவனத்தின் கார்கள் அதிக பவர் கொண்ட கார்களாக தயாரிக்கப்படுவதற்கு இது ஒரு சான்று. இந்த பட்டியலில் இரண்டாவது டாடா கார் இது. இந்த டாடா அல்ட்ராஸ் டர்போ கார் அதிக பவர் கொண்ட காராக இருக்கிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 108பிஎச்பி பவரையும் 140என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா அல்ட்ராஸ் காரில் டர்போ இன்ஜின் கொண்ட பேஸ் வேரியண்ட் மார்க்கெட்டில் ரூபாய் 9.10 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த இஞ்ஜின்ன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் டாடா நெக்ஸான் காரிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளது.
மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ்: ஃப்ரான்க்ஸ் மாருதி நிறுவனத்தின் பவர்ஃபுல் காராக இருக்கிறது. இந்த ஃபிரான்க்ஸ் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 99 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக இருக்கிறது. மாருதி நிறுவனம் இந்த காரை கடந்த ஜனவரி மாதம் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.

தற்போது சிறப்பாக விற்பனையாகும் மாருதி கார்களில் இந்த பிரான்ஸ் காரம் ஒன்று. மாருதி ஃபிரான்க்ஸ் கார் தற்போது டர்போ இன்ஜின் உடன் மார்க்கெட்டில் 9.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது இந்த காரியம் இன்ஜின் ஹை ஸ்பீடு மேனுவல் அல்லது ஏடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது விற்பனையாகி வருகிறது.
நிஸான் மேக்னட் மற்றும் ரெனால்ட் கைகர்: இந்த பட்டியலில் கடைசியாக இரண்டு கார்கள் இருக்கிறது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 99 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக இருக்கிறது. இந்த இரு கார்களும் ஒரே ஆலையில் நாம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களும் ஒரே ஆலையை தயாரித்து இரு வேறு பிராண்டுகளில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தக் கார்களின் விலையை பொருத்தவரையில் நிஸான் மேக்னெட் டர்போ இன்ஜின் கொண்ட கார் ரூபாய் 9.19 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. அதேநேரம் ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் டர்போ இன்ஜின் பெட்ரோல் கொண்ட கார் ரூபாய் 10 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று மக்கள் பல ரூபாய் பத்து லட்சத்துக்கு குறைவான கார்களை அதிகம் தேடி வருகின்றனர். மக்கள் பலரின் வாழ்வாதாரம் மற்றும் வருமானம் உயர்ந்துவிட்ட நிலையில் முதன்முதலாக கார் வாங்கும் போது ரூபாய் பத்து லட்சத்திற்கான பட்ஜெட்டுக்குள் அவர்களை வாங்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த காரெல்லாம் நிச்சயம் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









