இந்தியாவில் அறிமுகமான இந்த எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! சிட்டில ஓட்றதுக்கு இதுதான் சரியான சாய்ஸ்!

2023ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நாம் நெருங்கி விட்டோம். இன்னும் ஒரு சில நாட்களில் 2024ம் வருடம் பிறக்கவுள்ளது. இந்த நேரத்தில், நடப்பு 2023ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முக்கியமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று எம்ஜி கோமெட் இவி. வெறும் 7.98 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

MG Comet EV

எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 230 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு சற்று சிறிய எலெக்ட்ரிக் காராக தோன்றினாலும் கூட, உண்மையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதுதான்.

டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon EV Facelift): ஏற்கனவே விற்பனையில் இருந்த டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இது. 14.74 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

2023 Tata Nexon EV

ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 465 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன், டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 8.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது.

சிட்ரோன் இசி3 (Citroen eC3): 11.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 320 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரி ஆப்ஷன், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

Citroen eC3

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த 3 எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) ஆகிய எலெக்ட்ரிக் கார்களும் கூட, நடப்பு 2023ம் ஆண்டில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் ராக்கெட் வேகம் எடுத்து விட்டதையே இது உணர்த்துகிறது. வரும் 2024ம் ஆண்டு மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில், இதைக்காட்டிலும் இன்னும் அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 26, 2023, 23:58 [IST]
English summary
Top electric car launches in 2023 mg comet ev tata nexon ev facelift
மேலும்... #Year Ender 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X