இவ்வளவு கம்மி பட்ஜெட்ல கூட கார் இருக்குதா? தீபாவளிக்கு கார் வாங்குற ஐடியால இருந்தா இதை செக் பண்ணுங்க!

தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல சிறிய ரக கார்களுக்கு தள்ளுபடிகள் அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளன . இந்த தீபாவளிக்கு நீங்கள் சிறிய காரை வாங்குவதாக இருந்தால் எது உங்களுக்கு சிறந்த சாய்ஸாக இருக்கும் என காணலாம் வாருங்கள்.

தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் இந்தியாவில் பலர் கார்களை வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். இதை முன்னிட்டு பல நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கான தள்ளுபடி அறிவித்துள்ளது. இதனால் உங்கள் வீட்டிற்கு புதிய காரை கொண்டு வர இதுதான் சிறந்த நேரமாக இருக்கும். சில நிறுவனங்கள் ரூபாய் 50,000 வரை கூட தள்ளுபடி விலையை அறிவித்துள்ளன. ஆனால் இந்த தள்ளுபடி என்பது ஊருக்கு ஊர் மாறுபடும் மற்றும் டீலரை பொருத்தும் மாறுபடும்.

best cars to buy for diwali

முதன்முறையாக கார் வாங்க நினைக்கும் பலர் ரூபாய் 6 லட்சத்திற்கும் குறைவான கார்களை வாங்க அதிக விருப்பப்படுவார்கள். அவர்களுக்கு மாருதி நிறுவனத்திடம் ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மேலும் சில சிறிய ரக கார்களும் மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கிறது. அதைப் பற்றி காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ: இந்த கார் மாருதி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் காராக இருந்தாலும் இதன் டிசைன் எஸ்யூவி காரை போல இருக்கும். இந்த காரில் பயணிகள் ஏறி இறங்குவது என்பது சுலபமாக இருக்கிறது. இந்த காரின் உயரம் மற்றும் சீட் பொசிஷன் அதற்கு தகுந்தார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

best cars to buy for diwali

இது 68 பிஎஸ் பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் 56 பிஎஸ் பவரையும் 82 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த கார் 5ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட காராக இருக்கிறது. இந்த காரின் உட்புறம் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யக் கூடியதாக இருக்கிறது. மேலும் மத்தியில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் இருக்கிறது. இந்த காரில் கீலெஸ் என்ட்ரி, முன்பக்க டூயல் ஏர் பேக் பின்பக்க பார்கிங் சென்சார், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

best cars to buy for diwali

மாருதி சுஸூகி செலிரியோ: இந்த கார் மாருதி நிறுவனத்தின் பட்ஜெட் ப்ரீமியம் சிறிய காராக இருக்கிறது. இந்த கார் ஆல்டோ காருக்கு சற்று மேலாகவும் வேகன்ஆர் காருக்கு சற்று கீழாகவும் உள்ள பொசிஷனில் இருக்கிறது. இதன் அளவு மற்றும் பிராக்டிகாலிட்டி, விலை எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.0லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67பிஎஸ் பவரையும் 89என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஹை ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.இந்த காரின் உட்புறம் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதுபோக இந்த காரில் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், சென்டரில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்பக்க பயணிகளுக்கான ஏர்பேக், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

best cars to buy for diwali

வேகன்ஆர்: மாருதி நிறுவனத்தின் உயரமான பாடி கொண்ட காராக இந்த வேகன் ஆர் கார் இருக்கிறது. இந்த கார் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. 1.0 லிட்டர் இன்ஜின் 67 பிஎஸ் பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் தான் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் 57 பிஎஸ் பவர் 82 என்எம் டார்க் திறனும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த இன்ஜின் இருக்கிறது.

best cars to buy for diwali

இன்னொரு இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 1.2 லிட்டர் கே 12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதை இஞ்சின் தான் பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களில் இருக்கிறது. இந்த இன்ஜின் 90 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.இதனால் இந்த கார் பழைய வேகன்ஆர் காரை விட சற்று பெரிய காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டியுடன் இருக்கிறது. மேலும் இந்த காரில் ரிமோட் கீ லெஸ் என்ட்ரி மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள், ஸ்டேரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், பவர் விண்டோ ரியர் பார்க்கிங் சென்சார், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹை ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் ஆகியன இருக்கிறது.

best cars to buy for diwali

ரெனால்ட் க்விட்: ரெனால்ட் நிறுவனத்தின் சிறிய ரக எஸ்யூவி கார் போன்ற வடிவத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த காராக இந்த கார் இருக்கும். இந்த தீபாவளி பண்டிகையில் நீங்கள் இந்த காரை தேர்வு செய்யலாம். இந்த காருக்கு ரூபாய் 50,000வரையில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காரில் 1.0லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67பிஎச்பி பவரையும் 91என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக இருக்கிறது.

டாடா டியாகோ: டாடா டியாகோ கார் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற காராக இருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் கிராஷ் டெஸ்டில் 4ஸ்டார்களை பெற்ற பாதுகாப்பான காரராக இருக்கிறது. இந்த காரில் சிறப்பான ஹார்மோன் ஹெட்யூனிட் ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ70ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்தின் மற்ற கார்களை காட்டிலும் இந்த கார் சிறப்பான ஹேண்டிலிங் அம்சங்கள் கொண்ட காராக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளி பண்டிகை கொண்டாட உங்கள் வீட்டிற்கு புதிதாக ஒரு காரை கொண்டு வர விரும்பினால் இதுதான் உங்களுக்கு தக்க சமயமான நேரம். முதன் முறையாக கார் வாங்குகிறீர்கள் என்றால் மேலே உள்ள பட்டியலில் ஒரு காரை வாங்கி நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2023, 11:45 [IST]
English summary
Top vehicle options under rs 6 lakh on road for the upcoming festive season
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X