புனித நீரில் காரை குளிப்பாட்டி "பாவத்தை" போக்க முயற்சித்த இளைஞர்கள்! போலீஸ் சுற்றி வளைத்த பரபரப்பு சம்பவம்!
கங்கை ஆற்றில் மஹிந்திரா தார் காரை இறக்கி "பாவத்தை" போக்க முயன்ற 6 இளைஞர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் சுத்தம் செய்ய முயன்ற மஹிந்திரா தார் காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்
இந்தியாவில் இந்துக்களின் புனித நதியாகக் கங்கை நதி இருக்கிறது. வாழ்வில் ஒரு நாளாவது அதில் குளித்தால் மனிதன் தன் வாழ்நாளில் செய்த பாவம் எல்லாம் போகும் என்பது ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான மக்கள் கங்கை நதியில் நீராட ஆன்மீக பயணம் செய்கின்றனர். சிலர் இந்த நதியை அசுத்தப்படுத்துவதால் கங்கை நதி அசுத்தமாக இருக்கிறது.

இந்நிலையில் கங்கையில் நதியில் அசுத்தப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹரித்துவாரில் உள்ள போலீசார் "மர்யாதா" என்ற பெயரில் ஒரு ஆப்ரேஷன் ஒன்றைச் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 2021 ஆண்டு ஜூலை மாதம் முதல் நதிக்கரையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது நதியை அசுத்தம் செய்பவர்களைப் பார்த்தால் அவர்களை உடனடியாக கைது செய்கின்றனர். நிதியை அசுத்தம் செய்வது குற்றம் என ஆங்காங்கே எச்சரிக்கை போர்டுகளையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்கை நதிக்கு நடுவே சிலர் மஹிந்திரா காரை நிறுத்தி சுத்தம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது அங்கு 6 பேர் மஹிந்திரா தார் காரை ஆற்றில் இறங்கிச் சுத்தப்படுத்திக்கொண்டும், செல்ஃபி எடுத்துக்கொண்டும் இருந்துள்ளது.
இதையடுத்து போலீசார் கையும் களவுமாக அவர்களைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்றனர். அவர் சுத்தப்படுத்திய காரையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இங்கு இவர்கள் மீது புனிதமான கங்கை நதியை அசுத்தப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் காரை பொருத்தவரை 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 128.2 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது ஆஃப்ரோடிங்கிற்கு ஏற்ற கார். தற்போது கங்கையில் குறைவான தண்ணீர் இருப்பதால் அதில் தாராளமாக இந்த காரை ஓட்டி செல்ல முடியும். அதனால் தான் இந்த 6 இளைஞர்கள் நதிக்குள் காரை எடுத்த சென்றுள்ளனர்.
ஆனால் கங்கை தொடர்ந்து அசுத்தமாகிக்கொண்டே இருப்பதால் அதைச் சுத்தப்படுத்தவும், நதி மேலும் அசுத்தமாகாமல் தடுக்கவும் அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் இப்படியாகக் காரை குளிப்பாட்டி நதியை அசுத்தமாக்கியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தான். அதற்காக இயற்கையைச் சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. மாறாக வீட்டிலேயே நாம் காரை தண்ணீரை வைத்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வாகனம் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டால் தான் அதன் வெளிப்புறத்தோற்றம் மங்காமல் நீண்ட காலம் பளீச் என இருக்கும்.


Click it and Unblock the Notifications








