ஆயிரக்கணக்கான கோடியை கொட்ட போறாங்க! 3வது தொழிற்சாலையை அமைக்கிறது டொயோட்டா! தட்டி தூக்கியது இந்த மாநிலமா!
இந்தியாவில் தற்போதைய நிலையில் டொயோட்டா (Toyota) நிறுவனம், 2 தொழிற்சாலைகளுடன் இயங்கி வருகிறது. இந்த 2 தொழிற்சாலைகளுமே, கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூர் (Bangalore) நகரத்திற்கு அருகே இருக்கும் பிடதி (Bidadi) பகுதியில்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டொயோட்டா நிறுவனத்தின் 3வது தொழிற்சாலையும் பிடதியிலேயே அமையவுள்ளது.
இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படவுள்ள தகவலை டொயோட்டா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் 3வது தொழிற்சாலை ஆகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், டொயோட்டா நிறுவனமும், கர்நாடக அரசும் தற்போது கையெழுத்திட்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் பிடதி பகுதியில்தான், டொயோட்டா நிறுவனத்தின் 3வது தொழிற்சாலையும் அமையவுள்ளது.

டொயோட்டா நிறுவனம் இந்த புதிய தொழிற்சாலையில் 3,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கார்களாக இருக்கும். இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களாக இருந்து வருகிறது.
ஆனால் புதிய தொழிற்சாலையின் மூலம் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் கார்களாக உயரவுள்ளது. இது தற்போதைய நிலையை காட்டிலும், சுமார் 30 சதவீதம் அதிகம் ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலை வரும் 2026ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள 3 வரிசைகளை கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார், இந்த புதிய தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மூன்றாவதாக புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது குறித்தும், அங்கு 3 வரிசைகளை கொண்ட புதிய எஸ்யூவி ரக கார் ஒன்றை உற்பத்தி செய்யவுள்ளது தொடர்பாகவும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போது இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது, 7 சீட்டர் கார் ஆகும். எம்ஜி ஹெக்டர் (MG Hector), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் டாடா ஹாரியர் (Tata Harrier) ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக இது இருக்கும். இந்த கார் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் கார் விற்பனை தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே எதிர்காலத்தை மனதில் வைத்து, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 3வது தொழிற்சாலையை அமைக்கும் முடிவை டொயோட்டா நிறுவனம் எடுத்துள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








