Toyota BZ4X குடும்பத்தோட லாங் டிரைவ் போக செம எலெக்ட்ரிக் கார்! விலையை மட்டும் கேட்காதீங்க!

டொயோட்டா நிறுவனம் தனது பிஇசட்4எக்ஸ் (BZ4X) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது?, இதன் விலை மற்றும் மற்ற விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் டில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது பிஇசட்4எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை முதன் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுதே இந்த கார் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

Toyota BZ4X Electric SUV 2

இந்த கார் மார்கெட்டில் உள்ள கியா, ஹூண்டாய், ஆடி, வால்வோ, மினி ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக் போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த காரை டொயோட்டா நிறுவனம் ஜப்பானில் உள்ள Beyond Zero என்ற நிறுவனத்தின் பெயரைச் சுருக்கி BZ என வைத்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் இந்த காரின் லுக்கை ஸ்போர்ட்டியாக உருவாக்கியுள்ளது. இதன் வடிவமைப்பு ஆச்சரியமான வகையிலிருந்தது. ஆட்டோ எக்ஸ்போவில் பலரது கவனத்தை இந்த கார் ஈர்த்தது. இந்த காரில் முழுவதும் எல்இடி லைட்டிங் இருந்தது.

Toyota BZ4X Electric SUV

இதன் அம்சங்களைப் பற்றிப் பார்த்தால் இதில் அட்வான்ஸ்டு டேஷ்போர்டு இருக்கிறது, மற்றும் குறைவான பட்டன்கள் மட்டுமே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டில் பெரிய ஸ்கிரீன் மற்றும் இந்த காரின் சீட்கள் எல்லாம் சொகுசான சீட்களாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டொயோட்டா பிஇசட்4எக்ஸ் (BZ4X) காரை பொருத்தவரை 71.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழு சார்ஜில் 500 கி.மீ வரை பயணிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இந்த கார் முன்பக்க வீல் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

Toyota BZ4X Electric SUV

இந்த காரில் மொத்தம் 204எச்பி பவர் மற்றும்265 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரில் பூஸ்ட் மோட் இருக்கிறது. அதில் 218 எச்பி பவரையும், 336 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் அளவிற்கு இதன் மோட்டார் மாறிவிடும்.

இந்த டொயொட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.7 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இது 80 சதவீதம் சார்ஜை வெறும் 30 நிமிடத்தில் ஏற்றிவிடும். இதனால் நீண்ட தூரப் பயணத்தின் போது சார்ஜிங் ஸ்டேஷன்களை மட்டும் பார்த்து வைத்துக்கொண்டால் போதும்.

இந்த காரில் நாம் காரை சார்ஜரில் போட்டுவிட்டு சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்து வருவதற்கும் கார் கிட்டத்தட்ட 80 சதவீத சார்ஜை ஏற்றிவிடும். இந்த கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் அப்படி இந்தியாவிற்கு வந்தால் விலை ரூ40-50 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் ஏற்கனவே மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் அயானிக் 5, கியா இவி6 மற்றும் வால்வோ, மினி ஆகிய பிராண்டில் வெளியாகும் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 16:00 [IST]
English summary
Toyota bz4x expected to launch soon in india
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X