சத்தமே இல்லாம பண்ணீட்டாங்க! டொயோட்டா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பாக்கல! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). இந்த நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. எனவேதான் வாடிக்கையாளர்கள் அனைவரும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.

தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross), டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), டொயோட்டா கேம்ரி (Toyota Camry) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) ஆகிய கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Toyota Innova Hycross

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 19,608 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 19 சதவீத வளர்ச்சி ஆகும். கார்களின் விற்பனை சிறப்பான வகையில் உயர்ந்து வரும் நிலையில், டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கார்களின் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புதான் அது. குறிப்பிட்ட ஒரு சில கார்கள் என்றில்லாமல், அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தியுள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்தே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்து விட்டது. இதன்படி டொயோட்டா நிறுவன கார்களின் விலை 1-2 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Toyota Rumion

நடப்பு நிதியாண்டில் டொயோட்டா நிறுவனம் கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்துவது இது 2வது முறையாகும். நடப்பு நிதியாண்டு கடந்த ஏப்ரல் மாதம்தான் தொடங்கியது. இதன்படி பார்த்தால், சுமார் 3 மாதங்களில் 2 முறை டொயோட்டா நிறுவனம் கார்களின் விலைகளை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே, கார்களின் விலைகளை உயர்த்தியாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் டொயோட்டா நிறுவனத்தின் கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், கூடுதல் விலையை கொடுக்க வேண்டியதிருக்கும்.

டொயோட்டா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையிலான மாருதி சுஸுகி இன்விக்டோ கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை காட்டிலும் குறைவான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு தற்போதைய நிலையில் 24 மாதங்கள், அதாவது சுமார் 2 வருடங்கள் வரை காத்திருப்பு காலமாக உள்ளது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட அதே காரான மாருதி சுஸுகி இன்விக்டோவிற்கு வெறும் 8-10 மாதங்கள் வரை மட்டுமே காத்திருப்பு காலமாக உள்ளது. எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் வாடிக்கையாளர்கள் பலர், மாருதி சுஸுகி இன்விக்டோ பக்கம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதால், அதனுடைய கார்களின் விற்பனை குறையுமா? என்பதையெல்லாம் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஏனெனில் கார்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தாலும், கூடுதல் தொகையை கொடுப்பதற்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

டொயோட்டா நிறுவனம் தற்போது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. டொயோட்டா ரூமியான் என்ற பெயரில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படும் இந்த கார், இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கார் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 23:38 [IST]
English summary
Toyota car price hike innova hycross crysta urban cruiser hyryder
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+