என்னங்க பெரிய ரோல்ஸ் ராய்ஸ்.. டொயோட்டாவோட இந்த காரு முன்னாடி அது மட்டுமல்ல மிக பெரிய சொகுசு கப்பலே தோத்திரும்!
மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் என்ற உடன் பலரின் நினைவிற்கு பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் கார்களைக் காட்டிலும் ரோல்ஸ் ராய்ஸ் காரே நினைவிற்கு வரும். ஏனெனில், மற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களக் காட்டிலும் மிக உயரிய விலை மற்றும் லக்சூரி அம்சங்களை வாரி வழங்கக் கூடிய கார்களாக ரோல்ஸ் ராய்ஸின் தயாரிப்புகள் இருக்கின்றன.
இதன் காரணத்தினாலேயே பல உலக பணக்காரர்கள் பலரை இந்த நிறுவனத்தின் கார்கள் தன் வசம் அடிமையாக்கி வைத்திருக்கின்றது. குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கு உலகளவில் மிகப் பெரிய ரசிக பட்டாளம் இருக்கின்றது. இத்தகைய மிக உயரிய ஆடம்பர வசதிக் கொண்ட காருக்கே டஃப் கொடுக்கும் விதமாக ஓர் சூப்பர் சொகுசு காரை டொயோட்டா நிறுவனம் உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மற்றும் பென்ட்லீ பென்டேகா உள்ளிட்ட பல ஆடம்பர கார்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஸ்டைல், வசதி, கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் புதுமுக லக்சூரி காரை டொயோட்டா உருவாக்கி இருக்கின்றது.
சென்சூரி பிராண்ட் பெயரிலேயே இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது ஓர் லக்சூரி எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே டொயோட்டா நிறுவனம் உலக சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக வெகு விரைவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த காரின் வெளியீட்டு நிகழ்வு வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் அரங்கேறிவிடும் என தெரிவிக்கின்றன. சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட வெல்ஃபையர் சொகுசு எம்பிவி காரை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வின்போதே டொயோட்டா சென்சூரி எஸ்யூவி காரின் வெளியீடு பற்றிய தகவலை மேலோட்டமாக அது அறிவித்தது.
டொயோட்டா நிறுவனம் செஞ்சூரி எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த நிறுவனம் இதன் செடான் ரக பதிப்பை கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமாக சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. செஞ்சூரி பிராண்டின்கீழ் உள்ள கார்கள் ஜப்பானில் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த நிலை தொடர போவதில்லை. விரைவில், சென்சூரி பிராண்டில் உள்ள அனைத்து கார்களும் உலக சந்தையிலும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் டொயோட்டா வெளியிடவில்லை. நிறுவனத்தின் அதீத லக்சூரி வசதிக் கொண்ட சென்சூரி செடான் ரக காரை ஜப்பான் நாட்டின் பிரதமர் மற்றும் முக்கிய அந்தஸ்த்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த அளவிற்கு அரிய வகை காராக டொயோட்டாவின் சென்சூரி கார்கள் இருக்கின்றன. இந்த காரை மிகவும் அழகுமிக்க காராக டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது. அழகில் மட்டுமல்ல சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் இந்த கார் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. செதுக்கியதை போன்ற அழகுடைய பான்னெட் இந்த காருக்கு வேற லெவல் அழகிய தோற்றத்தை வழங்குகின்றது.

அத்துடன், அகலமான ஆர்ச்சுகள் கொண்ட வீல்கள், டிஆர்எல்-களை உட்பக்கத்தில் கொண்ட எல்இடி ஹெட்லைட், பெரிய குரோம் கிரில், சாய்வான விண்ட் ஸ்கிரீன், விண்டோக்களின் கவர்ச்சியை கூட்டும் வகையில் அதன் ஓரங்களில் குரோம் லைன்கள் மற்றும் வால் பகுதியில் எல்இடி லைட் என பலதரப்பட்ட அம்சங்கள் சென்சூரி எஸ்யூவி காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இந்த காரில் ஐந்து பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இதற்காக பிரீமியம் தர இருக்கைகள் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன், பன்முக க்ளைமேட் செட்டிங், ஆம்பியன்ட் லைட்டுகள், ஒயர்லெஸ் சார்ஜிங் கருவி, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பன்முக ஏர் பேக்குகள், அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் புதிய காரில் இடம் பெற்றிருக்கின்றன.
எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் என்ன மாதிரியான திறன் கொண்டது பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், அதில் வி12 மோட்டார் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ஹைபிரிட் தொழில்நுட்பமும் அந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கார் டொயோட்டா லேண்ட் க்ரூஸரைக் காட்டிலும் மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுவரை யாரும் டொயோட்டா கார்களில் பார்த்திராத மற்றும் கேட்டிராத வசதிகளுடன் சென்சூரி உருவாகி இருக்கின்றது. ஆகையால், இந்த காருக்கு தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது விற்பனைக்கு வந்த பின்னரே முழுமையாக தெரிய வரும்.


Click it and Unblock the Notifications









