ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல... 30 கோடி கார்!! டொயோட்டா இப்படியொரு காரியத்தை செய்யும்னு யாரும் நினைச்சே பார்க்கல!

டொயோட்டா (Toyota) நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இத்தனை 88 வருடங்களில் உற்பத்தி செய்த மலைக்க வைக்கும் கார்கள் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. கார்கள் உற்பத்தியில் புதிய சாதனையை டொயோட்டா படைத்துள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான விபரங்களை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகளவில் பலருக்கு பரீட்சையமான கார் நிறுவனம் டொயோட்டா ஆகும். ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகளாக மார்க்கெட் உள்ளது. இந்தியாவில் 1990ஆம் காலக்கட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக டொயோட்டா செயல்பட்டு வருகிறது. டொயோட்டா நிறுவனம் சுஸுகி உடன் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

toyota crossed 30 crore cars production

டொயோட்டா நிறுவனம் இந்தியாவை பெரிதும் வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாகவே பயன்படுத்துகிறது. ஏனெனில், நம் நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வது அந்த அளவிற்கு செலவுமிகுந்த விஷயம் கிடையாது. இதனால், இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்துக்கு உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. அதேபோல், ஜப்பான் உள்பட மற்ற சில வெளிநாடுகளிலும் தொழிற்சாலைகளை டொயோட்டா கொண்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், டொயோட்டா ஓர் பாரம்பரியமிக்க, நீண்ட காலமாக செயல்படும் நிறுவனம் ஆகும். எத்தனை வருடங்கள் என்றால், சுமார் 88 வருடங்கள். இத்தனை வருடங்களில், சுமார் 30 கோடிக்கும் அதிகமான கார்களை உருவாக்கி டொயோட்டா சாதனை படைத்துள்ளது. 30 கோடியாவது காரை சமீபத்தில்தான் முழுவதுமாக தயாரித்து, தொழிற்சாலையில் இருந்து டொயோட்டா நிறுவனம் வெளியேற்றி உள்ளது.

toyota crossed 30 crore cars production

டொயோட்டா உருவாக்கிய முதல் வாகனம் மாடல் ஜி1 டிரக் ஆகும். இதனை, டொயோட்டா ஆட்டோமேட்டிம் லூம் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் உற்பத்தி பிரிவு தயாரித்தது. 30 கோடி கார்கள் உற்பத்தி என்கிற இமாலய மைல்கல்லை கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் டொயோட்டா தாண்டியது. 30 கோடி கார்கள் என்பன எதோ ஒரு நாட்டில் டொயோட்டா உற்பத்தி செய்தது கிடையாது, உலகம் முழுவதும் உள்ள அதன் தொழிற்சாலையில் இந்த நிறுவனம் உற்பத்தி செய்தவை ஆகும்.

30 கோடி கார்களில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேல், அதாவது சுமார் 18.05 கோடி கார்கள் ஜப்பானில் மட்டும் டொயோட்டா உற்பத்தி செய்தவை. மீதி 11.96 கோடி கார்களை மட்டுமே மற்ற உலக நாடுகள் மொத்ததிலும் டொயோட்டா உற்பத்தி செய்தவை ஆகும். டொயோட்டா இந்த 88 வருட காலத்தில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்த கார் கரோல்லா ஆகும்.

toyota crossed 30 crore cars production

இதுவரையில் சுமார் 5.34 கோடிக்கும் அதிகமான கரோல்லா கார்களை டொயோட்டா உற்பத்தி செய்துள்ளது. இத்தனைக்கும் இந்த டொயோட்டா செடான் கார் கடந்த 1996இல் தான் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், இந்த 27 வருடங்களில் பலமுறை கரோல்லா அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 30 கோடி கார்கள் உற்பத்தியை கடந்திருப்பதற்கு, தங்களது டீலர்ஷிப் அதிகாரிகளுக்கும், வர்த்தக தாரர்களுக்கும் டொயோட்டா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் 9 தசாப்தங்களாக கார்கள் உற்பத்தியில் இடைவிடாது கொடிக்கட்டி பறப்பது எல்லாம் வேற லெவல். இதனை டொயோட்டா சர்வ சாதாரணமாக செய்து வருகிறது. இதில் இருந்து கார்கள் உற்பத்தியில் அந்த நிறுவனத்துக்கு உண்டான அனுபவத்தை அறிய முடிகிறது. டொயோட்டாவின் இந்த இமாலய சாதனை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 10:00 [IST]
English summary
Toyota crossed 30 crore cars production milestone in 88 years
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X