டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு விற்பன அள்ளுது போலிருக்கே... ஒரே நேரத்துல இத்தன யூனிட் டெலிவரியா!!!

டொயோட்டா நிறுவனம் மிக சமீபத்தில் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. காருக்கான புக்கிங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விலைகள் சென்ற ஆண்டின் டிசம்பர் மாத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. மேலும், நிறுவனம் அறிவித்தபடி இன்னோவா ஹைகிராஸின் டெலிவரி பணிகள் 2023 ஜனவரியின் இறுதி நாளில் தொடங்கப்பட்டது.

ஜனவரி 30 ஆம் தேதி அன்றே இன்னோவா ஹைகிராஸ் காரின் டெலிவரி பணிகள் தொடங்கின. இந்த நிலையில் ஒரே நாளில் 10 இன்னோவா ஹைகிராஸ் கார்கள் ஒற்றை டீலரால் டெலிவரி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. புதுமுக இன்னோவா ஹைகிராஸ் காருக்கு இவ்ளோ சூப்பரான வரவேற்பா என பலரையும் வாயடைக்கச் செய்து இருக்கின்றது.

டொயோட்டா

எங்கு இந்த சம்பவம் நடைபெற்றது?

மேலும், இந்த நிகழ்வு டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கும் மிக அமோகமான வரவேற்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இந்த பிரமாண்ட டெலிவரி சம்பவம் அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னோவா ஹைகிராஸ் ரூ. 18.30 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலை ரூ. 28.97 லட்சம் ஆகும்.

பிரமாண்ட டெலிவரி சம்பவம்

இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் மதிப்பு ஆகும். இத்தகைய விலைக் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் காரையே இந்தியர்கள் அதிகளவில் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர். பிரமாண்ட டெலிவரி நிகழ்லில் எந்த வேரியண்ட் அதிகளவில் டெலிவரிக் கொடுக்கப்பட்டது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. ஆகையால், இன்னோவா ஹைகிராஸின் எந்த வேரியண்டிற்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.

டொயோட்டா

இத்தனை வேரியண்டுல கிடைக்குதா!

ஜி (G), ஜிஎக்ஸ் (GX), விஎக்ஸ் (VX), இசட்எக்ஸ் (ZX) மற்றும் இசட்எக்ஸ் (ஓ) (ZX -O) என மொத்தம் 5 வேரியண்ட்களில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஜி மற்றும் ஜிஎக்ஸ் ஆகிய இரண்டும் வழக்கமான பெட்ரோல் மோட்டார்களைக் கொண்ட தேர்வாகும், விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் (ஓ) ஆகிய மூன்று தேர்வுகளிலேயே செல்ஃப் சார்ஜ் வசதிக் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது.

இந்த தொழில்நுட்பம் பெட்ரோல் செலவைக் குறைத்து, மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, ஏராளமான பிரீமியம் அம்சங்களை இந்த உயர்நிலை வேரியண்டுகளிலேயே டொயோட்டா அதிகம் வழங்கி இருக்கின்றது. 2.0 பெட்ரோல் மோட்டாருடனே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை டொயோட்டா வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வு டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்படுகின்றது.

இன்னோவா க்ரிஸ்டா டீசல்

இந்த பெட்ரோல் மோட்டாரின் வருகையால் இனி இன்னோவா க்ரிஸ்டா டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. வழக்கமான பெட்ரோல் ஆப்ஷன் இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்படுவதால் இந்த முடிவை டொயோட்டா எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிக சமீபத்திலேயே இன்னோவா க்ரிஸ்டா டீசலுக்கான புக்கிங் பணிகள் தொடங்கின. இது வெகு விரைவில் புதிய அவதாரத்தில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதற்கு ஏற்கனவே இந்திய சந்தையில் டிமாண்ட் மிக அதிகம். இந்த நிலையிலேயே டொயோட்டா அண்மையில் டீசல் இன்னோவா க்ரிஸ்டாவின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. காத்திருப்பு காலம் அதிகரித்துவிடக் கூடாது என்கிற நோக்கிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. இதுமட்டுமின்றி, புதிய அவதாரத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் க்ரிஸ்டாவை விற்பனைக்குக் கொண்டு வரும் நோக்கிலும் விற்பனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இப்போது இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் வழக்கமான பெட்ரோல் மோட்டார் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 16 கிமீ மைலேஜ் தரும்.

23 கிமீ மைலேஜ் தரும்

அதேவேளையில், ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீ வரையில் மைலேஜ் தரும் என டொயோட்டா உறுதி அளித்துள்ளது. இதுமட்டுமில்லைங்க, வென்டிலேட் இருக்கை, பவர்டு பின் பக்க கதவு, பின் பக்கத்திற்கான சன் ஷேட், மல்டி - ஸோன் ஏசி, எலெக்ட்ரோ குரோமிக் ஐஆர்விஎம் மற்றும் ஓட்டோமேன் இருக்கைகள் என எக்கசக்க பிரீமியம் அம்சங்கள் மிக தாராளமாக ஹைகிராஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமின்றி, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் சிஸ்டம் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளையும் ஹைகிராஸில் டொயோட்டா வாரி வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 17:40 [IST]
English summary
Toyota dealer delivers 10 innova hycross same day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+