Toyota Fortuner Crashஆகும் வீடியோ! ஈரமான ரோட்டை தாக்குபிடிக்க முடியாம கரப்பான் பூச்சிபோல கவிழ்ந்ததால் பரபரப்பு
டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கிச் சென்று கவிழ்ந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிக உறுதிக்கும், அதீத பாதுகிற்கும் பெயர்போன கார் மாடலே டொயோட்டா ஃபார்ச்சூனர். இத்தகைய கார் சாலையில் சறுக்கிச் சென்று கவிழ்ந்து விபத்துக்கு ஆளாகியது ஒட்டுமொத்த இந்திய வாகன பிரியர்களையும் அதிர்ச்சியில் மூழ்க செய்திருக்கின்றது.
இந்த கார் விபத்துக்குள்ளானதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் ஒன்று ஈரப்பதமான சாலை. இரண்டாவது ஒன்று அதீத வேகம். ஆம், இந்த காரை ஓட்டி வந்த இளைஞர், சமூக வலைதளத்தில் வீடியோவை பதிவிடுவதற்காக, செல்போனில் படம் பிடித்த வண்ணம் காரை அதிகபட்ச வேகத்தில் ஓட்டி வந்திருக்கின்றார்.

மணிக்கு 100 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே கார் ஈரப்பதமான சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு ஆளாகி இருக்கின்றது. இதனால்தான் அதிக வேகம் ஆபத்தானது என கூறப்படுகின்றது. மேலும், எப்போதும் அதீத வேகம் கூடவே கூடாது, குறைவான வேகத்தில் மட்டும் பயணிக்குமாறு வாகன ஓட்டுகளிடம் அறிவுறுத்தப்படுகின்றது.
ஆனால், நம்மில் பலர் இதைக் காது கொடுத்துகூட கேட்பது இல்லை. குறிப்பாக, மழைக் காலத்தில் அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதைக் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். ஈரமான சாலை மிக பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இவ்வாறு அறுவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், பலர் அதைக் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
இதற்கு சான்றாகவே ஃபார்ச்சூனர் காரின் விபத்து சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. கேரளா மாநிலத்திலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. விபத்து நடைபெற்ற துள்ளியமான இடம் பற்றிய விபரம் வெளியாகவில்லை. அதிக வேகத்தினால் என்ன மாதிரியான ஆபத்துகள் அரங்கேறும் என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த வீடியோவையும், விபத்து சம்பவம் பற்றிய தகவலையும் இந்த பதிவில் வெளியிட்டு இருக்கின்றோம்.
வீடியோவில் கார் விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் சீராக செல்வதை நம்மால் காண முடிகின்றது. இந்த நிலையிலேயே கட்டுப்பாட்டை இழந்த ஃபார்சத்சூனர் திடீரென விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. வழக்கமான திருப்பத்தை எடுப்பதை போலவே அந்த கார் விபத்தைச் சந்திக்கும் சில நொடிகள் முன்னர் வரை தெரிகின்றது.
ஆனால், அது சாலையின் மறுபுறத்தில் மோதி கவிழ்கின்றது என்பது, அது முட்டி-மோதி கவிழ்ந்த பின்னரே தெரிந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிவிட்டது. இந்த நிகழ்வு பார்ப்போரை கதிகலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. விபத்தின் காரணமாக காரின் பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் முழுமையாக உருக்குலைந்து விட்டன.
பெருத்த சேதம் அக்கார் அடைந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறைவான வேகத்தில் போயிருந்தால் நிச்சயம் ஃபார்ச்சூனரின் உரிமையாளரால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும். அதீத வேகம், ஈரப்பதமான சாலை ஆகிய இரண்டும் இந்த விபத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டது. இத்தகைய விபத்துகளை 'ஹைட்ரோபிளானிங்' என்பர்.
ஈரப்பதத்தால் சாலைக்கும், டயருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுவதையே இவ்வாறு வாகன உலகம் அழைக்கின்றது. எந்தவொரு பொருளும் ஈரமாகும்போது அது வழவழப்பான நிலையை அடைந்துவிடும். இதற்கு சாலைகள் விதிவிலக்கல்ல. இதையே தற்போதைய கேரளா ஃபார்ச்சூனர் எஸ்யூவி விபத்து சம்பவம் நமக்கு நினைவுப்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
நம்மில் பலர் பாதுகாப்பான மற்றும் அதிக உறுதியான காரை வைத்திருப்பதால் நம்மை விபத்து நெறுங்காது என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், விதி மீறல்கள் எத்தகைய பாதுகாப்பான சூழலையும் ஆபத்தாக்கிவிடும். இதற்கான சான்றாகவும் இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஆகையால், வேகத்தை தவிர்ப்பதே நம் அனைவருக்கும் நல்லது என்பதே எங்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications








