ஃபார்ச்சூனர் காரோட மைலேஜ் ஜாஸ்தியாகபோகுது! எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிபோயிருவீங்க!

டொயோட்டா நிறுவனம் தனது டீசல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் கொண்டை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் கென்யாவில் நடந்த ஒரு கண்கா்டசியில் ஹூலிக்ஸ் ஜி ஆர் டிரக்கை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த டீசல் மைல்டு ஹைபிரிட் செட்டப் செய்யப்பட்டிருந்தது. புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் காரிலும் இடம் பெறும் என தெரிகிறது.

ஹூலிக்ஸ் மைல்டு ஹைபிரிட் காரைப் பொறுத்தவரை லுக்ஸ் இமேஜ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கார் அடுத்த 2024 ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்த வருகிறது.

Fortuner Mild-hybrid

தென் ஆப்பிரிக்காவில் ஹூலிக்ஸ் மற்றும் ஃபார்ச்சூனர் காரும் மைல்டு ஹைபிரிட் நுட்பத்துடன் 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்திய வருகைக்காக பலர் காத்திருக்கின்றனர். இந்திய வருகைக்கு பிறகு இந்த காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த அப்டேட்டில் 2.8 லிட்டர் டீசல் இன்ஜினில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமாக 48 வாட்ஸ் மோட்டார் பொருத்தப்பட உள்ளது. இந்த சிஸ்டம் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த சிஸ்டத்தில் மைல்டு ஹைபிரிட் இணைக்கப்படுவதன் மூலம் இதன் மைலேஜ் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Fortuner Mild-hybrid

டொயோட்டா நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இந்த ஹூலிக்ஸ் மைல்டு ஹைபிரிட் செட்டப்பில் 48 வோல்ட் பேட்டரி செட்டப் உடன் வரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தால் இந்த ஹூலிக்ஸ் காரின் ஆஃப்ரோடு மற்றும் டோயின் அம்சங்கள் மாறாது என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த டீசல் மைல்டு ஹைபிரிட் இன்ஜினை பொறுத்தவரை தற்போது ஹூலிக்ஸ் காரில் மட்டுமே நிறுவனம் பொருத்தி வருகிறது.

ஆனால் இதை மற்ற கார்களுக்கும் வரிசையாக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய ஃபார்ச்சூனர் காரில் இந்த மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தை புகுத்த முடிவு செய்துள்ளது. அப்படி பார்க்கும்போது இந்தியாவில் வரப்போகும் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் காரில் இந்த அம்சம் இடம் பெறலாம். இதில் இன்ஜின் மட்டுமில்லாமல் இதன் வெளிப்புறத் தோற்றத்திலும் பெரிய அளவில் மாற்றம் இடம்பெறப் போகிறது.

Fortuner Mild-hybrid

புதிய மாற்றம் குறித்த கான்செப்ட் காரின் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தற்போது உள்ள பார்சனல் காரை விட மிக அதிகமான மாற்றங்கள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. புதிய டிசைனில் பெரிய அளவில் இருக்கும் படியாக இல்லை ஆஃப் ரோடிங் அம்சங்கள் அதிகம் இருக்கும் படியாக டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது கான்செப்ட் கார் தான் என்பதால் இதன் டிசைன் அப்படியே வரும் என சொல்ல முடியாது இதன் லுக்கே மொத்தமாக கூட மாற வாய்ப்புள்ளது. கான்செப்ட் மாடலில் சோப்பு போடுப்பா போல இருக்கும் இந்த கார் புரொடெக்சன் மாடலுக்கு வரும்போது நிச்சயம் சூப்பர் ஸ்டாராக மாறிவிடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 21:01 [IST]
English summary
Toyota fortuner may get mild hybrid engine next year
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X