துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டு உள்ளே போகாது!! உ.பி அரசியல்வாதியின் காரை பார்த்து பதறிப்போகும் எதிரிகள்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்று புல்லட் ப்ரூஃப் கண்ணாடி உடன் மாடிஃபை செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடிஃபை ஃபார்ச்சூனர் காரில் லெக்ஸஸ் பாடி கிட் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மாடிஃபை கார் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்று ஃபார்ச்சூனர் ஆகும். இந்த டொயோட்டா தயாரிப்புக்கு அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் நம் நாட்டில் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், ஃபார்ச்சூனருக்கு ஹேட்டர்களே இல்லை என்றுக் கூட சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு ஃபார்ச்சூனர் கார்கள் நம்பத்தன்மையை வழங்குகின்றன.

பல இலட்ச கிமீ தொலைவிற்கு டிரைவ் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் கார்களை பரவலாக நிறைய பகுதிகளில் காண முடியும். அதேபோல், மாடிஃபை செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் கார்களை பற்றியும் நிறைய முறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஃபார்ச்சூனர் கார்களை வாங்கும் நிறைய பேர் காரை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்துக் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில், மாடிஃபை செய்யப்பட்ட இந்த குறிப்பிட்ட ஃபார்ச்சூனர் கார் 2ஆம் தலைமுறை வெர்சன் என கூறப்படுகிறது. 2ஆம் தலைமுறை ஃபார்ச்சூனர் 2016இல் அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாகவே, டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் ரக்டான தோற்றத்தை கொண்டிருப்பவை என்பது நமக்கு தெரியும். இருப்பினும், அதனை காட்டிலும் ரக்டான தோற்றத்தில் தனது ஃபார்ச்சூனர் காரை காட்ட பலர் முயற்சிக்கின்றனர்.

இந்த குறிப்பிட்ட மாடிஃபை ஃபார்ச்சூனர் காருக்கு விலையுயர்ந்த லெக்ஸஸ் காரின் பாடி கிட் வழங்கப்பட்டு உள்ளது. உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரது ஃபார்ச்சூனர் காரான இது ஓர் வொர்க் ஷாப்பில் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. இந்த மாடிஃபை ஃபார்ச்சூனர் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த காரில் புல்லட்ப்ரூஃப் கண்ணாடிகள் மற்றும் விண்ட்ஷீல்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகளை பொருத்தியது நினைத்ததை விட மெக்கானிக் பணியாளர்களுக்கு கடினமானதாக இருந்துள்ளது. குறிப்பாக, புல்லட்ஃப்ரூஃப் கண்ணாடிகளை பொருத்தியதினால், காரின் கதவுகளை மூடுவதில் சில சவால்கள் ஏற்பட்டன. ஆனால் உண்மையில், ஆரம்பத்தில் இந்த ஃபார்ச்சூனர் காரை அதன் உரிமையாளரான அந்த அரசியல்வாதி, முழுவதும் பெயிண்ட் அடிக்கவே மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

ஆனால், அதன்பின் காரில் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் பொருத்த கார் உரிமையாளர் விரும்பியுள்ளார். புல்ல்ட் ப்ரூஃப் கண்ணாடிகள் பொருத்தப்பட்டது மட்டுமின்றி, காரின் முன்பக்க கிரில், ஹெட்லேம்ப்கள், பம்பர் மற்றும் ஃபெண்டர்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டன. அதேபோல், காரின் பின்பக்கத்தில் பம்பர், டெயில்லேம்ப்கள் மற்றும் ஸ்பாய்லர் உள்ளிட்டவையும் காரில் இருந்து அகற்றப்பட்டன.
இவ்வளவு ஏன், காரின் பின்பக்க கதவில் வழங்கப்படும் க்ரோம் ஹைலைட்கள் கூட நீக்கப்பட்டன. பின்னர், அவற்றிற்கு பதிலாக லெக்ஸஸ் கார்களுக்கான ஆஃப்டர் மார்க்கெட் பாடி கிட் இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் பொருத்தப்பட்டு உள்ளது. எல்லா வேலைகளும் முடிந்த பின்னர், காரில் ஏற்கனவே சில டொக்குகள் மற்றும் கீறல்கள் இருந்ததை கண்டறிந்து, அவற்றையும் மெக்கானிக்குகள் சரிச்செய்து உள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் சாதாரணமாகவே அழகானது. அப்படியிருக்கையில் இவ்வாறான ஆஃப்டர் மார்க்கெட் பாடி கிட்டை பொருத்தி இருப்பது மேலும் அழகு கூட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, விலையுயர்ந்த லெக்ஸஸ் கார்களுக்கான பாடி கிட்டை இந்த மாடிஃபிகேஷனில் பயன்படுத்தி இருப்பதே இதில் ஹைலைட்டானது.


Click it and Unblock the Notifications









