இதுவரை இல்லாத சாதனையை படைக்கப்போகும் டொயோட்டா! 2023ஐ இனி மறக்க மாட்டாங்க!
டொயோட்டா நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 2023-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்ததாக சாதனையை பதிவு செய்ய காத்திருக்கிறது. முதல் 11 மாதத்தில் 9.36 மில்லியன் பயணிகள் கார்களை தயாரித்த இந்நிறுவனம் இன்று 10 மில்லியன் என்ற இலக்கை தாண்டும் என கணிக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சர்வதேச அளவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிப்புகள் மீது மக்கள் அதிக நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் என்றால் மக்கள் மத்தியில் தனி பிரியம் இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் கார்கள் சர்வதேச அளவில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. பலர் நிறுவன வாகனங்களை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

டொயோட்டா நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் இருப்பதிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் வரை மொத்தம் 93.6 லட்சம் பயணிகள் வாகனத்தை தயாரித்துள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 11 மாதத்தில் 92.3 லட்சம் வாகனங்களை மட்டுமே தயாரித்திருந்தது. தற்போது புதிய மைல் கல்லை எட்டி உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை என்றால் டொயோட்டா சொகுசு கார் நிறுவனமான லெக்சஸ் காரின் விற்பனையும் சேர்த்துதான் இந்த விற்பனை என கணக்கிடப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் டொயோட்டா நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் இந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தம் ஒரு கோடி கார்களை நிறுவனம் தயாரித்து விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம் வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் விற்பனையாக உள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் 9,26,573 வாகனங்களை தயாரித்துள்ளது. இதில் ஜப்பானை விட்டு வெளியேவே 611,656 வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. இதில் விற்பனை செய்த காரின் எண்ணிக்கை என்றால் 9,05,066 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 13.6 சதவீதம் அதிகமாகும்.
இதுவரை டொயோட்டா நிறுவனம் ஒரு மாதத்தில் விற்பனை செய்த கார்களிலேயே கடந்த நவம்பர் மாத விற்பனை தான் மிக அதிகமான விற்பனையாக இருக்கிறது. ஜப்பானில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 1,39,749 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 27.1% அதிகமாகும். சர்வதேச அளவில் 11.5% விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் வாகன விற்பனையை பொருத்தவரை 3,43,981 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 53.4 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும்.

டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையை பொருத்தவரை சிறப்பாக இருந்துள்ளது. கொரோனா பரவலுக்குப் பிறகு கார்களின் விற்பனை மந்தமான நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கார்களின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் இந்த டிசம்பர் மாதத்தில் விற்பனையை கணக்கிட்டு பார்க்கும்போது சர்வதேச அளவில் ஒரு கோடி கார்கள் விற்பனை செய்து இதுவரை இல்லாத சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச அளவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது இதனால் இந்த ரக கார்களின் விற்பனை அதிகமாக மாறி வருகிறது ஆனால் இந்திராக காரர்களை தயாரிப்பதில் செமி கண்டெக்டர் தட்டுப்பாடு காரணமாக கார் தயாரிப்பு என்பது மந்தமாகியுள்ளது 2024-ம் ஆண்டு இதைவிட மிகப்பெரிய அளவில் வாகன விற்பனை நடக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வளர்ந்து வருவதற்கு இது ஒரு சாட்சியாக இருக்கிறது இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவிலும் சமீப காலமாக டொயோட்டா கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொரோனா பரவலுக்கு பிறகு மெல்ல மெல்ல ஆட்டோமொபைல் துறை தனது பழைய நிலையை அடைந்து வருகிறது. இதனால் பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் மக்களின் தேவை உட்பட அனைத்தும் மாறியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் டொயோட்டா நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைத்து அந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications









