கருப்பனை போல் டொயோட்டாவும் குசும்பன்... கொஞ்சம் விற்பனை அதிகரிச்ச உடனே அது செஞ்சிருக்க வேலைய பாருங்க!

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு இந்தியாவில் சற்று வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்த்திராத வண்ணமாக அக்காரின் விலையை பலமடங்கு உயர்த்தி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வளவு விலை உயர்வு செய்யப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக இன்னோவா ஹைகிராஸ் மாறி இருக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா மாடலிற்கு கிடைத்து வந்ததைப் போலவே இன்னோவா ஹைகிராஸுக்கும் நல்ல நிலையில் வரவேற்புக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் இந்த மாடலின் விலையை டொயோட்டா நிறுவனம் முன் அறிவிப்பு இன்றி உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டொயோட்டா

இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தபின்னர் செய்யப்படும் முதல் விலை உயர்வு இதுவே ஆகும். கடந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலேயே இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகமாக 18.30 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

வழக்கமான பெட்ரோல் மோட்டார் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் மோட்டார் என இரு விதமான ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட்டன. தானாக சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் அம்சமே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வேரியண்டுகளைப் பொருத்தவரையில் ஒட்டுமொத்தமாக 10 விதமான தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றது.

டொயோட்டா

இந்த பத்தில் ஆறு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டவை ஆகும். மீதமுள்ள 3ம் வழக்கமான பெட்ரோல் மோட்டார்கள் ஆகும். ரூ. 25 ஆயிரம் தொடங்கி ரூ. 75 ஆயிரம் வரையில் தேர்வுகளைப் பொருத்து விலை உயர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் முன்னதாக ரூ. 18.30 லட்சமாக இருந்த இன்னோவா ஹைகிராஸின் ஆரம்ப விலை தற்போது ரூ. 18.55 லட்சமாக உயர்ந்து உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

வேரியண்ட் வாரியான விலை உயர்வு விபரம்:

இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல்

  • ஜி 7-சீட்டர் (பெட்ரோல்): ரூ. 18.55 லட்சம்
  • ஜி 8-சீட்டர் (பெட்ரோல்): ரூ. 18.60 லட்சம்
  • ஜிஎக்ஸ் 7-சீட்டர் (பெட்ரோல்): ரூ. 19.40 லட்சம்
  • ஜிஎக்ஸ் 8-சீட்டர் (பெட்ரோல்): ரூ. 19.45 லட்சம்
டொயோட்டா

இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட்

  • விஎக்ஸ் 7-சீட்டர் (ஹைபிரிட்): ரூ. 24.76 லட்சம்
  • விஎக்ஸ் 8-சீட்டர் (ஹைபிரிட்): ரூ. 24.81 லட்சம்
  • விஎக்ஸ் (ஓ) 7-சீட்டர் (ஹைபிரிட்): ரூ. 26.73 லட்சம்
  • விஎக்ஸ் (ஓ) 8-சீட்டர் (ஹைபிரிட்): ரூ. 26.78 லட்சம்
  • இசட்எக்ஸ் (ஹைபிரிட்): ரூ. 29.08 லட்சம்
  • இசட்எக்ஸ்(ஓ) (ஹைபிரிட்): ரூ. 29.72 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த புதிய விலையிலேயே இன்னோவா ஹைகிராஸ் இனி விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹைபிரிட் அம்சம் கொண்ட இன்னவோ ஹைகிராஸ் காரே அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.24 கிமீ வரை மைலேஜ் தரும். அதேவேளையில் வழக்கமான பெட்ரோல் மோட்டார் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.13 கிமீ வரை மைலேஜ் தரும்.

டொயோட்டா

இரண்டிலும் ஒரே மாதிரியான பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மைலேஜை போலவே திறன் வெளிப்பாட்டிலும் ஹைபிரிட் தேர்வில் இந்த மோட்டார் மிக சிறந்ததாக இருக்கின்றது. ஹைபிரிட் தேர்வில் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரை வெளியேற்றும்.

அதுவே வழக்கமான மோட்டாரில் அது வெறும் 169 பிஎச்பி-யை மட்டுமே வெளியேற்றும். ஹைபிரிட் தேர்வில் இ-சிவிடி டிரான்ஸ்மிஷனும், பெட்ரோல் மோட்டார் தேர்வில் சிவிடி டிரான்ஸ்மிஷனும் வழங்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த கார் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த திடீர் விலை உயர்விற்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 2, 2023, 20:00 [IST]
English summary
Toyota hikes prices of innova hycross first time
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X