போருக்கு போகும்போதுகூட கூலா போகலாம்.. இந்தியன் ஆர்மியின் பயன்பாட்டில் இந்த காரா! கவர்மென்ட்டுக்கு ஒரு சல்யூட்!
இந்திய ராணுவ படையின் பயன்பாட்டில் டொயோட்டா (Toyota)-வின் விலை உயர்ந்த பிக்-அப் டிரக் மாடலான ஹைலக்ஸ் (Hilux) இணைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் காரை நம் ராணுவ படையில் இணைத்ததற்கான காரணம் என்னவாக இருக்கும்?, இதற்கான காரணத்தையே இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux), இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் புகழ்பெற்ற பிக்-அப் டிரக்குகளில் இதுவும் ஒன்றாகும். இதில் லக்சூரி அம்சம் மற்றும் நவீன கால தொழில்நுட்பம் என அனைத்தும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும். இத்தகைய வாகனத்தையே இந்திய ராணுவம் தற்போது வாங்கி இருக்கின்றது.

அதிக லக்சூரி அம்சங்கள் கொண்டிருக்கின்ற காரணத்திற்காக இந்த காரை இந்திய ராணுவம் வாங்கி இருக்குமோ என நம்மில் சிலர் நினைக்கக் கூடும். ஆனால் இந்த காரை டொயோட்டா நிறுவனம் வாங்க வேறு சில காரணங்கள் இருக்கின்றன. டொயோட்டா நிறுவனம் இந்த பிக்-அப் டிரக்கை இந்தியாவின் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறனுடன் தயாரித்து இருக்கின்றது.
குறிப்பாக இந்த காரில் 4X4 தொழில்நுட்பத்தை அது வழங்கி இருக்கின்றது. இந்த அம்சமே கரடு-முரடான காட்டுப் பாதை மற்றும் மலைப் பாதைகளைக் கூட அசால்ட் செய்ய உதவியாக இருக்கின்றது. இந்த திறன்களே இந்திய ராணுவம் ஹைலக்ஸை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த மாதிரியான திறன்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த வாகனத்தின் விலை மிக உயர்ந்ததாக இருக்கின்றது. இருப்பினும் இந்திய ராணுவம் தன்னுடைய பயன்பாட்டிற்காக ஹைலக்ஸை வாங்கி இருக்கின்றது. அதேவேளையில், மேலே பார்த்த திறன்களுடன் ஏகப்பட்ட பிக்-அப் டிரக்குகள் இந்தியாவில் விற்பனையில் இருக்க டொயோட்டா ஹைலக்ஸை ஏன் இந்திய ராணுவம் தேர்வு செய்தார்கள் என்கிற கேள்வியும் உங்களுக்கு எழும்பியிருக்கும்.
இந்த பிக்-அப் டிரக்கில் பொருட்களை மட்டும் அல்ல கூடவே பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும். ஆகையால், டிரைவருடன் சேர்த்து நான்கு வரையிலான வீரர்களும் ஹைலக்ஸில் பயணிக்க முடியும். இதுபோன்று பன்முக பயன்பாட்டு வசதியைக் கொண்டிருப்பதனாலேயே இந்திய ராணுவம் ஹைலக்ஸை தேர்வு செய்திருக்கின்றது.
ஏற்கனவே இந்தியன் ஆர்மியின் பயன்பாட்டில் டாடா சஃபாரி ஸ்டோர்மே, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் இன்னும் பல 4X4 தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார்கள் உள்ளன. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக டொயோட்டா ஹைலக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரை தேர்வு செய்வதற்கு முன்னர் பல ஆய்வுகளுக்கு அதனை இந்திய ராணுவம் உட்படுத்தி இருக்கின்றது.
இந்திய ராணுவத்தின் தேவைகளான ஆயுள், பன்முக பயன்பாடு மற்றும் ராணுவத்தின் பிற தேவைகளை பூர்த்தி செய்யுமா போன்ற அளவுருக்களின் அடிப்படையிலேயே ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்திலும் பச்சைக் கொடியை அந்த கார் பெற்றது. இதன் விளைவாகவே தற்போது பயன்பாட்டிற்காக ஹைலக்ஸ் வாங்கப்பட்டு இருக்கின்றது.
நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போலவே மிகுந்த ஆடம்பர வசதிகள் கொண்ட பிக்-அப் டிரக்கே டொயோட்டா ஹைலக்ஸ் ஆகும். குறிப்பாக, இதன் உயர் நிலை வேரியண்டில் ஏகப்பட்ட லக்சூரி அம்சங்கள் மற்றும் கவர்ச்சிகரமான அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இன்டெக்ரேட்டட் எல்இடி டே டைம் லைட், எல்இடி வால் பகுதி லைட் மற்றும் காரின் முக்கிய பகுதிகளில் கண்களைக் கவரும் குரோம் அணிகலன்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, லெதர் இருக்கைகள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட ஓட்டுநர் இருக்கை, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், இரண்டாம் வரிசை இருக்கைக்கும் ஏசி வெண்டுகள், 8.0 அங்குல அளவிலான இன்ஃபோடெயின்மென்ட் திரை, டிஎஃப்டி திரை, யுவி எதிர்ப்பு கண்ணாடிகள் என ஏகப்பட்ட அம்சங்களை டொயோட்டா இந்த காரில் வழங்கி இருக்கின்றது. இதேபோல் எஞ்ஜின் விஷயத்தில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 204 பிஎஸ் மற்றும் 420 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் 4X4 அம்சம், டொயோட்டாவின் ஏ-டிராக் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், டவுன் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், 700 மிமீ ஆழமான நீர் நிலைகளை சமாளிக்கும் வசதி, வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிஃபரன்சியல் லாக் மற்றும் ரியர் டிஃபரன்சியல் லாக் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அசத்தலான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்திய ராணுவம் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் டிரக்கை தற்போது நம்பி வாங்கி இருக்கின்றது. இது ராணுவ வீரர்கள் பன்முக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. அதேவேளையில் சொகுசான ரைடு அனுபவத்தையும் ராணுவ வீரர்களுக்கு இந்த கார் வழங்க உள்ளது.


Click it and Unblock the Notifications








