மிகவும் குறைவான விலையில் வரும் டொயோட்டா கார்! எழுதி வெச்சுக்கோங்க! இனி இன்னோவாவை புகழ்றதுக்கு ஆளே இருக்காது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு, வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா திகழ்கிறது.

இந்த சூழலில், அப்டேட் செய்யப்பட்ட 2023 இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டாப் வேரியண்ட்களின் விலையை (Price) டொயோட்டா (Toyota) நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி VX FLT, VX மற்றும் ZX ஆகிய வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காருக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Toyota Innova Crysta Front Design

அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 150 பிஎஸ் மற்றும் 343 என்எம் ஆகும். இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில், ஈக்கோ மற்றும் பவர் ஆகிய டிரைவ் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆம்பியண்ட் லைட்டிங், டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் ரியர் ஆட்டோ ஏசி ஆகிய வசதிகளும் (Features) கொடுக்கப்பட்டுள்ளன.

Toyota Innova Crysta Front View

அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டிசைனிலும் (Design) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு, புதிய முன் பக்க பம்பர் ஆகியவற்றை முக்கியமான டிசைன் மாற்றங்களாக குறிப்பிட முடியும்.

விலையை பொறுத்தவரையில், VX FLT வேரியண்ட்டின் 7 சீட்டர் மாடலின் விலை 23.79 லட்ச ரூபாய் ஆகவும், இதே வேரியண்ட்டின் 8 சீட்டர் மாடலின் விலை 23.84 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் VX 7 சீட்டர் மாடலின் விலை 23.79 லட்ச ரூபாய் ஆகவும், இதே வேரியண்ட்டின் 8 சீட்டர் மாடலின் விலை 23.84 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் ZX வேரியண்ட்டின் 7 சீட்டர் மாடலின் விலை 25.43 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவில் மேலும் ஒரு புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

மாருதி சுஸுகி-டொயோட்டா இடையே கூட்டணி இருந்து வரும் நிலையில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன், டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரை விட, இந்த எம்பிவி காரின் விலை மிகவும் குறைவாக இருக்கும். அனேகமாக இதன் ஆரம்ப விலை வெறும் 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம், மாருதி சுஸுகி எர்டிகா காரை தனது பிராண்டில் களமிறக்கவுள்ள நிலையில், மாருதி சுஸுகி நிறுவனம், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக மாருதி சுஸுகி எங்கேஜ் என்ற பெயரில் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 2, 2023, 16:50 [IST]
English summary
Toyota innova crysta top variants price announced all details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+