டொயோட்டா இன்னோவாவை தூக்கி சாப்பிட போகும் மாருதி கார்! அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்!

டொயோட்டா (Toyota) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும், கார் உலகின் ஜாம்பவான்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட 2 நிறுவனங்களும் கடந்த ஒரு சில வருடங்களாக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார்களை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் விற்பனை செய்து வருகிறது.

டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) கார் இதற்கு ஒரு உதாரணம். மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா பிராண்டில் ரீ-பேட்ஜ் (Rebadge) செய்யப்பட்டு, க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் டொயோட்டா நிறுவனம் மட்டுமே இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை ரீ-பேட்ஜ் செய்து, விற்பனை செய்து கொண்டுள்ளது.

Toyota Innova Hycross

இதை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனமும் டொயோட்டா கார்களை தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரக கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள தகவலை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் ஜூலை மாதம் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கவிருப்பது, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

Toyota Innova Hycross

இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யவுள்ள முதல் டொயோட்டா தயாரிப்பு என்ற பெருமையை இது பெறவுள்ளது. இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமாக உள்ளது? என்பது யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்த காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கு 2 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் (Waiting Period) நிலவுகிறது.

அப்படிப்பட்ட ஒரு காரை மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கவுள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், பெட்ரோல் (Petrol) மற்றும் (Hybrid) என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் இந்த காரின் மாருதி சுஸுகி வெர்ஷன், ஹைப்ரிட் வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷனில், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் ஆப்ஷனுடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இதனுடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷனில் ஏராளமான வசதிகளையும் (Features) நாம் எதிர்பார்க்கலாம்.

இதில், அடாஸ் தொழில்நுட்பம் (ADAS Technology) மிகவும் முக்கியமானது. அனேகமாக இந்த வசதியுடன் வரவுள்ள முதல் மாருதி சுஸுகி கார் இதுவாகதான் இருக்கும். இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய காரில் வழங்கப்படவுள்ளன.

அதே சமயம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் டிசைனில் (Design) ஒரு சில மாற்றங்களை செய்துதான் மாருதி சுஸுகி நிறுவனம் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி புதிய அலாய் வீல்கள், புதிய க்ரில், முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள் ஆகியவை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில் இன்னும் நிறைய கார்கள் விற்பனைக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 27, 2023, 23:19 [IST]
English summary
Toyota innova hycross based maruti suzuki mpv launch july all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+