டொயோட்டா இன்னோவா காரை வாங்குவதாக இருந்தால், இப்படி வாங்கனும்!! என்னா ஸ்டைலு... ரூ.40,000 மட்டும் அதிகம்!

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லிமிடெட் எடிசனை உங்களில் பலர் இன்னும் நேரில் பார்த்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அத்தகையவர்களுக்காகவே, புதிய இன்னோவா ஹைகிராஸ் லிமிடெட் எடிசன் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் அதன் பிரபலமான இன்னோவா காரில் புதிய லிமிடெட் எடிசனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இன்னோவா ஹைகிராஸ் காரின் ஜி.எக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த லிமிடெட் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இன்னோவா ஹைகிராஸ் காருடன் ஒப்பிடுகையில் புதிய லிமிடெட் எடிசன் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தில் மாற்றங்களை பெற்று வந்துள்ளது.

toyota innova hycross limited edition

அதாவது, காருக்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய காஸ்மெட்டிக் அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காருக்கு சில ஹைலைட்களை இன்னோவா ஹைகிராஸின் டாப் வேரியண்ட்டான வி.எக்ஸ்-இல் டொயோட்டா வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, காரின் ஸ்டாண்டர்ட் ஜி.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையை காட்டிலும் ரூ.40,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்னோவா ஹைகிராஸின் புதிய லிமிடெட் எடிசனை 7 அல்லது 8 இருக்கை ஆப்ஷன்களில் பெறலாம். புதிய இன்னோவா ஹைகிராஸ் லிமிடெட் எடிசன் காரின் முன்பக்கத்தில் க்ரில் பகுதியில் ஜொலிக்கின்ற கோல்டன் நிற ஹைலைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், காரின் முன்பக்க பம்பர் சில்வர் நிற ட்ரீட்மெண்ட்டை கொண்டுள்ளது.

toyota innova hycross limited edition

இதே சில்வர் நிற ட்ரீட்மெண்ட்டை காரின் பின்பக்க பம்பரிலும் பார்க்க முடிகிறது. ஆனால், வழக்கமான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஜி.எக்ஸ் காரில் பின்பக்க பம்பர் எந்தவொரு பெயிண்ட்டும் இல்லாமல் வழங்கப்படுகிறது. அதேபோல், காருக்கு உள்ளேயும், வழக்கமான இன்னோவா ஹைகிராஸ் ஜி.எக்ஸ் காருடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்கள் இந்த லிமிடெட் எடிசனில் உள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காருக்கு உள்ளே டேஸ்போர்ட் மற்றும் டோர் ரிம்கள் உள்ளிட்டவை கவர்ச்சிக்கரமான நிறங்களில் வழங்கப்பட்டுள்ளதை தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் காணலாம். ஆனால், இன்னோவா ஹைகிராஸின் மற்ற வேரியண்ட்களில் டேஸ்போர்டு மற்றும் டோர் ரிம்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன.

toyota innova hycross limited edition

அத்துடன், புதிய லிமிடெட் எடிசனின் உட்பக்க டேஸ்போர்டில் மென்மையான பிளாஸ்டிக் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பிளாஸ்டிக் பேனல்களை இன்னோவா ஹைகிராஸ் காரின் டாப் வி.எக்ஸ் வேரியண்ட்டிலும் காண முடியும். அதேபோல், விலையுயர்ந்த வி.எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் அதே சீட் அப்ஹோல்ஸ்ட்ரி தான் இந்த லிமிடெட் எடிசனிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்னோவா ஹைகிராஸ் ஜி.எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் புதிய லிமிடெட் எடிசனிலும் கிடைக்கும். சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 171 பிஎச்பி மற்றும் 206 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

toyota innova hycross limited edition

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் இது லிமிடெட் எடிசன் ஆகும். அதாவது, இந்த ஸ்பெஷல் எடிசன் இன்னோவா ஹைகிராஸ் கார் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இந்த காரை வாங்க விரும்புபவர்கள் கீழே பதிவிடப்பட்டுள்ள யூடியூப் வீடியோவில் இன்னோவா ஹைகிராஸ் லிமிடெட் எடிசனை விரிவாக காணலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 22:45 [IST]
English summary
Toyota innova hycross limited edition explainer video
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X