20 இலட்ச ரூபாய் கொடுத்து காரை வாங்கிட்டு இப்படியா பண்றது!! இன்னோவா கார் இதுனு சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க!
பார்ப்பதற்கே முரட்டுத்தனமான தோற்றத்தில் இருக்கும் இந்த கார் ஓர் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் என்றால் நம்ப முடிகிறதா. ஓர் கார் பார்க்கிங்கில் இந்த மாடிஃபை இன்னோவா ஹைகிராஸ் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கார்களுக்கு என்றே தனி வரவேற்பு உள்ளதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தியா டொயோட்டா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய மிகவும் சில கார்களுள் இன்னோவாவும் ஒன்று. இன்னோவாவின் 3வது தலைமுறை மாடல் தற்சமயம் இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் என்கிற பெயரில் விற்பனையில் உள்ளது.

இன்னோவா ஹைகிராஸ் கடந்த ஆண்டில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள், இந்த காரை தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான ஆக்ஸஸரீகள் கள்ள சந்தையில் விற்பனையாக ஆரம்பித்துவிட்டன. அவற்றை கொண்டு மாடிஃபை செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் கார் ஒன்றை தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே, பெரும்பாலான டொயோட்டா கார்களுக்கு லெக்ஸஸ் நிறுவனத்தின் பெரிய அளவிலான கிரில் கச்சிதமாக பொருந்தும். அதேபோன்றதான கிரில் இந்த குறிப்பிட்ட மாடிஃபை இன்னோவா ஹைகிராஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரில்லை பார்க்கும்போது நமக்கு அவெஞ்சர்ஸின் வில்லன் தானோஸின் தாடை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இவ்வாறான கார் கிரில்கள் இந்தியாவிற்கு புதியதாக இருக்கலாம். ஆனால், சீனாவில் நிறைய கார்களை இவ்வாறான முகப்பு பகுதியுடன் காணலாம். கிரில் பகுதிக்கு கீழே டொயோட்டா வெல்ஃபையர் காரில் உள்ளதை போன்று பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் அப்படியே தான் உள்ளன என்றாலும், இந்த குறிப்பிட்ட இன்னோவா ஹைகிராஸ் காரின் முகப்பு பகுதியில் ஏகப்பட்ட க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பக்க பம்பரில் பூமராங் வடிவில் எல்இடி விளக்குகளை நீங்கள் காணலாம். இவை டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. அப்படியே இந்த மாடிஃபை காருக்கு பின்னால் சென்றால், 3 எக்ஸாஸ்ட் குழாய்கள் இருப்பதை காணலாம். ஆனால், இதில் ஒன்று மட்டும் தான் உண்மையானது. மற்ற இரண்டும் போலியானவை.

இதேபோல், காருக்கு உள்ளேயும் பல அம்சங்கள் நம்மை கவரக்கூடியவைகளாக உள்ளன. குறிப்பாக, பின் இருக்கை பயணிகளுக்கு என தனித்தனியாக 13.2 இன்ச்சில் இரு திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்பக்க கதவு கைப்பிடிகள் சில்வர் ட்ரீட்மெண்ட்டை கொண்டவைகளாக உள்ளன. காரின் உட்பக்க கேபின் முழுக்க RGB விளக்கு செட்-அப் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பின் இருக்கை பயணிகள் கால் வைக்கும் பகுதியிலும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸில் வழங்கும் சென்சார்கள் மற்றும் பார்கிங் கேமரா உள்ளிட்டவை இந்த மாடிஃபை காரிலும் உள்ளன. அதேபோல் என்ஜின் & கியர்பாக்ஸ் சிஸ்டங்களிலும் எந்த மாற்றமும் இருக்காது என நினைக்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் என்பதையே சட்டெரன கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு காரின் முன்பக்கம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாடிஃபை காருக்கு உள்ளே பின் இருக்கை பயணிகளுக்கும் பொழுதுப்போக்கு திரை வழங்கப்பட்டு இருப்பதை டொயோட்டா கவனிக்க வேண்டும். ஏனெனில், இன்னோவா ஹைகிராஸில் இந்த அம்சத்தை ஸ்டாண்டர்ட்டாக வழங்க டொயோட்டா முயற்சிக்கலாம்.


Click it and Unblock the Notifications









