யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்! புது டொயோட்டா இன்னோவா காரை வாங்க கூட்டம் அலை மோத போகுது! ரொம்ப சந்தோஷம்யா!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புத்தம் புதிய காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை டொயோட்டா நிறுவனம் தற்போது விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது.

ப்யூர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களுடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ப்யூர் பெட்ரோல் மாடலில் பொருத்தப்பட்டிருப்பது 2.0 லிட்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 172 பிஹெச்பி பவரையும், 197 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் பெட்ரோல்-ஹைப்ரிட் மாடலிலும் 2.0 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்! புது டொயோட்டா இன்னோவா காரை வாங்க கூட்டம் அலை மோத போகுது! ரொம்ப சந்தோஷம்யா!

ஸ்ட்ராங்கான ஹைப்ரிட் இன்ஜினுங்க!

இந்த 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் டொயோட்டா நிறுவனத்தின் 5வது தலைமுறை ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 183 பிஹெச்பி ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, இன்னோவா ஹைக்ராஸ் காரிலும் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் அடாஸ் போன்ற வசதிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை.

இதுதவிர ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி ஃபங்ஷன், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற பல்வேறு வசதிகளையும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் நிச்சயமாக ஏற்படும். ஆனால் இதன் விலை அதிகம் என்பதால், அனைவராலும் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள முடியாது.

யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்! புது டொயோட்டா இன்னோவா காரை வாங்க கூட்டம் அலை மோத போகுது! ரொம்ப சந்தோஷம்யா!

இத்தன லட்சம் போட்டு வாங்க முடியாதே!

தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 18.30 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 28.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் இதைக்காட்டிலும் சற்று குறைவான விலையில் கிடைத்தால், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை வாங்கி விட முடியும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ரொம்ப சந்தோஷம்யா!

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட அவற்றின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்கள் விற்பனைக்கு வந்த பிறகு, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெடி ஆகும் மாருதி!

ப்யூர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் என 2 மாடல்களிலும், புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. இதற்கிடையே மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது (2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருந்து வருகிறது. இதன் மூலம் கார்கள் பரிமாறி கொள்ளப்படுகின்றன).

சீக்கிரமே வரப்போகுதுங்க!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ஒரு சில மாற்றங்களை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மாருதி சுஸுகி வெர்ஷன் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆகஸ்ட் மாதம் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்ற ஒரு தகவல் உலா வந்து கொண்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2023, 22:25 [IST]
English summary
Toyota innova hycross new entry level variants india launch details
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+