நல்ல முடிவை எடுத்த டொயோட்டா! இதை ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்யா! இன்னைக்கு நைட் நிம்மதியா தூக்கம் வரும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா கார்கள் (Toyota Cars) மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை காட்டிலும், டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்புகின்றனர். குறிப்பாக டொயோட்டா நிறுவனம் சமீப காலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் கார்களுக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17,130 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 18,670 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாகும். இது விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகவும் சிறப்பான வளர்ச்சி ஆகும்.

Toyota Innova Hycross

டொயோட்டா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 8,075 இன்னோவா கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஆகிய 2 மாடல்களும் அடங்கும்.

இதுதவிர 3,474 டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) கார்களும், 3,108 டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்களும், நடப்பாண்டு மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை அதிகம் விற்பனையாக கூடிய டொயோட்டா கார்கள் ஆகும்.

Toyota Fortuner Legender

இவை தவிர டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) போன்ற கார்களும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், டொயோட்டா நிறுவன கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் கார்களை டெலிவரி (Delivery) பெறுவதற்காக, 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காத்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் பல்வேறு கார்களுக்கு இந்த அளவிற்கு முன்பதிவுகள் (Bookings) குவிந்துள்ளன. இதற்கு முன்பாக டொயோட்டா நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு 'ஆர்டர் பேக்லாக்' (Order Backlog) இருந்ததில்லை என கூறப்படுகிறது. அதாவது டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியதில் இருந்து பார்த்தால், இதுவே அதிகபட்சமான 'ஆர்டர் பேக்லாக்' ஆகும்.

குறிப்பாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் டாப் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு (Hybrid Variants), உச்சகட்ட டிமாண்ட் இருக்கிறது. எனவே இந்த வேரியண்ட்களுக்கு முன்பதிவுகளை ஏற்பதையே டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் நிறுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) தற்போதைய நிலையில் 24-30 மாதங்களாக உள்ளது.

எனவே டெலிவரி பெற வேண்டுமென்றால், நீங்கள் 2 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்க வேண்டும். டொயோட்டா நிறுவனத்தின் மற்ற கார்களுக்கும் கூட, வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அதிக காத்திருப்பு காலம் நிலவி கொண்டுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்வதற்காக டொயோட்டா நிறுவனம் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக உற்பத்தியை அதிகரித்தால் காத்திருப்பு காலம் குறையும். எனவே டொயோட்டா நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் 1.66 லட்சம் கார்களை மட்டும்தான் உற்பத்தி செய்திருந்தது. ஆனால் நடப்பு 2023-24ம் நிதியாண்டில் இதை அப்படியே இரட்டிப்பாக்குவதற்கு டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3.20 லட்சம் கார்களை உற்பத்தி செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூர் (Bangalore) நகருக்கு அருகே அமைந்துள்ள டொயோட்டா நிறுவனத்தின் பிடதி தொழிற்சாலையில் வரும் மே முதல் வாரத்தில், மூன்றாவது ஷிஃப்ட் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது உண்மையிலேயே மிகவும் சரியான முடிவு. உற்பத்தியை அதிகரிப்பதன் காரணமாக, இந்திய சந்தையில் டொயோட்டா கார்களுக்கான காத்திருப்பு காலம் குறையும். எனவே டொயோட்டா கார்களை முன்பதிவு செய்து விட்டு, டெலிவரிக்காக மிக நீண்ட காலமாக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 22, 2023, 19:05 [IST]
English summary
Toyota innova hycross urban cruiser hyryder fortuner waiting period production increase plan
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+