Toyota Innova Hycross காரை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்! விஷயம் தெரிஞ்சதும் நிறைய பேர் முடிவை மாத்தீட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). கடந்த 2022ம் வருட இறுதியில்தான், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் (Petrol Hybrid) இன்ஜின்கள் ஆகும். இதில், ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது.

Toyota Innova Hycross Side

அதே சமயம் டொயோட்டா நிறுவனத்தின் 5வது தலைமுறை ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜினின் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 183 பிஹெச்பி ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

எனவே இந்த காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத பெட்ரோல் இன்ஜின் மாடலுக்கான காத்திருப்பு காலம் 6-7 மாதங்களாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த மாடலை டெலிவரி பெறுவதற்கு நீங்கள் 6-7 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

Toyota Innova Hycross Back

அதே சமயம் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் மாடலுக்கான காத்திருப்பு காலம் 26 மாதங்கள் வரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் பெட்ரோல் ஹைப்ரிட் மாடலை டெலிவரி பெற வேண்டுமென்றால் நீங்கள் 2 வருடங்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டும்.

இவ்வளவு அதிகமான காத்திருப்பு காலம் வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது. எனவே இன்னோவா ஹைக்ராஸ் காரின் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு டொயோட்டா நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில், காத்திருப்பு காலம் குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஆரம்ப விலை (Price) 18.55 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 29.72 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இது மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே கருதப்படுகிறது.

ஏனெனில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 16.13 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.

இதுதவிர டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், அடாஸ் (ADAS), பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வெண்டிலேட்டட் இருக்கைகள், டிரைவர் இருக்கைக்கு மெமரி வசதி, 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், மிகவும் சிறப்பான ஒரு தயாரிப்பாக இருந்தாலும் கூட, இவ்வளவு அதிகமான காத்திருப்பு காலம் வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதித்து, விரக்தியடைய செய்யலாம். எனவே வேறு கார்களின் பக்கம் வாடிக்கையாளர்கள் மாறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே காத்திருப்பு காலத்தை குறைக்க முயல்வதே டொயோட்டா நிறுவனத்திற்கு நன்மை பயக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 12:26 [IST]
English summary
Toyota innova hycross waiting period 26 months check all the details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+