போட்றா வெடிய! 24 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா இன்னோவா கார்! தலை கால் புரியாத சந்தோஷத்தில் வாடிக்கையாளர்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். இந்த 2 இன்ஜின்களுமே சிறப்பான மைலேஜ் (Mileage) தரக்கூடியவை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 16.13 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு முன்பதிவுகள் (Bookings) குவிய, அதன் காத்திருப்பு காலம் (Waiting Period) அனுமார் வால் போல நீள தொடங்கியது. ஒரு கட்டத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலுக்கான காத்திருப்பு காலம் 24-30 மாதங்களாக உயர்ந்தது.

இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் டெலிவரிக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் காத்திருப்பு காலம் தற்போது குறைந்துள்ளது.
தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் பெட்ரோல் இன்ஜின் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் வெறும் 6-7 மாதங்களாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் வெறும் 15 மாதங்களாக குறைந்துள்ளது.
இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றாலும் கூட, பிராந்தியம், டீலர்ஷிப் மற்றும் கலர் உள்ளிட்ட காரணிகளை பொறுத்து, இந்த காத்திருப்பு காலம் சற்றே மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 18.82-30.26 லட்ச ரூபாய் விலைகளில் (Price) டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்திருப்பது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான செய்திதான். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் சற்று விரைவாக டெலிவரி கிடைக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையில் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் டெலிவரி பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








