குழந்தை கூட 10 மாசத்துல பிறந்துடும்! ஆனா இந்த காருக்கு 12 மாசம் தவம் இருக்கனும்!ஹைகிராஸ் காருக்கு செம டிமாண்ட்
டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாகியுள்ளது. தற்போது டாப் மாடலுக்கு 1 ஆண்டு வரை காத்திருப்பு காலம் இருப்பதாக டீலர்கள் சொல்லுகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
டொயோட்டா நிறுவனம் மக்கள் அதிகம் எதிர்பார்த்த தனது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த கார் அறிமுகமானதால் மக்கள் இந்த காரை அதிகமாக புக்கிங் செய்து வருகின்றனர். இந்த காரை ரூ50 ஆயிரம் பணம் செலுத்தி அருகில் உள்ள டொயோட்டா ஷோரூமிலோ அல்லது ஆன்லைனிலோ புக்கிங் செய்யலாம்.
வேரியன்ட் விபரம்
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை மொத்தம் இரண்டு ஹைபிரிட் அல்லாத வேரியன்ட்கள் உள்ளன G மற்றும் GX ஆகிய வேரியன்கள் உள்ளன. ஹைபிரிட் ஆப்ஷன் உடன் VX, ZX, ZX(O) ஆகிய வேரியன்ட்கள் இருக்கிறது. இதில் G,GX, மற்றும் VX ஆகிய வேரியன்ட்களில் 7 மற்றும் 8 சீட்டர் சீட்டிங் லே அவுட் ஆப்ஷன்கள் இருக்கிறது. ZX மற்றும் ZX(O) ஆகிய டாப் மாடல்களில் 7 சீட்டர் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

காத்திருப்பு காலம்
இந்த காருக்கான புக்கிங் மிக வேகமாகக் குவிந்து வரும் நிலையில் இந்த காருக்கான காத்திருப்பு காலம் மிக அதிகமாகி வருவதாக டீலர்கள் மூலம் தகவல்கள் வருகின்றன. இன்னோவா ஹைகிராஸ் காரின் டாப் மாடலுக்கான காத்திருப்பு காலம் 1 ஆண்டு வரை ஆகிறது என டீலர்கள் சொல்லி வருகின்றனர். இது போல ஸ்டிராங்க் ஹைபிரிட்டிலேயே குறைவான வேரியன்ட்களுக்கு 10 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் ஹைபிரிட் அல்லாத வேரியன்ட்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பில்லை. அதனால் அந்த வேரியன்ட்களுக்கான காத்திருப்பு காலம் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஹைபிரிட் அல்லாத வேரியன்ட்களை புக் செய்த 2-3 மாதங்களில் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் வரவேற்பு
இன்னோவா எம்பிவி காருக்கு இந்தியா முழுவதும் எப்படி வரவேற்பு இருந்ததோ அதே போல இன்னோவா ஹைகிராஸ் காருக்கும் மார்கெட்டில் செம வரவேற்பு இருப்பதாக டீலர்கள் கூறுகின்றனர். இன்னோவா காரை போல மக்கள் ஹைபிரிட் தொழிற்நுட்பம் கொண்ட காரையும் விரும்புகின்றனர். இதனால் எதிர்காலத்தில் இந்த காரின் விற்பனை பல மடங்கு அதிகமாகும் எனக் கணிக்கப்படுகிறது.
இன்ஜின்
இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. ஹைபிரிட் இன்ஜின் 184 எச்பி பவரை இ-டிரைவ் உடன் சேர்ந்து வழங்குகிறது. ஹைபிரிட் அல்லாத இன்ஜின் 172 எச் பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
மைலேஜ்
இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் ஹைபிரிட் இன்ஜின் லிட்டருக்கு 23.24 கி.மீ வரை மைலேஜ் தரும் எனக் கூறுகின்றனர். ஹைபிரிட் அல்லாத இன்ஜின் லிட்டருக்கு 16.13 கி.மீ வரை மைலேஜ் தரும் எனக் கூறுகின்றனர்.
அம்சங்கள்
இந்த காரில் உள்ள அம்சங்களைப் பொருத்தவரை 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக பானரோமிக் சன்ரூஃப், டுயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், 2ம் வரிசையில் லெக் ரெஸ்ட் உடன் கூடிய பவர்டு ஓட்டோமேன் சீட்கள், மூடு லைட்டிங், பவர்டு டெயில் கேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 8 வே பவர்டு டிரைவர் சீட் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது.
பாதுகாப்பு வசதி
இந்த இன்னோவா ஹைகிராஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை 6 ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது போக வெஹிகில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார், டொயோட்டா சேஃப்டி சென்ஸ் அதாவது அடாஸ் தொழிற்நுட்பம் கொண்ட அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிரேஸ் அசிஸ்டென்ஸ், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், ஃப்ரீ கிராஷ் சேஃப்டி (வார்னிங்), மற்றும் ஆட்டோ ஹைபீம் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








