ரோட்டுக்கு கொண்டு போனால் கண்டிப்பா புடிச்சிடுவாங்க!! இன்னோவா கார் இதுனு சொன்னால் நம்ப முடிகிறதா?

டொயோட்டா இன்னோவா கார் (Toyota Innova) ஒன்று 4x4 மான்ஸ்டர் வாகனமாக, பயங்கரமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. மிலிட்டரி வாகனம் போன்று நன்கு கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் இந்த மாடிஃபை இன்னோவா கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.

மாடிஃபிகேஷன் சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்பட்டாலும், ஒரு பக்கம் மாடிஃபிகேஷன்களை செய்வோர் செய்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மாடிஃபிகேஷன்களுக்காக இலட்சம், இலட்சமாக செலவு செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக, அளவில் பெரியதான டயர்கள் மற்றும் லிஃப்ட் கிட்களை வாங்கி தனது காரில் பொருத்துபவர்களை பார்த்தால், எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள்? என்றே கேட்க தோன்றும்.

toyota innova transformed into off-roader

ஏனெனில் எப்படியிருந்தாலும், அவ்வளவு பெரிய டயர் பொருத்தப்பட்ட வாகனத்தை கொண்டு சென்றால், போலீஸார் பிடித்து அபராதம் விதித்துவிடுவர். அப்படியிருந்தும், இங்கு ஒருவர் டொயோட்டா இன்னோவா எம்பிவி காரை வித்தியாசமான ஆஃப்-ரோடு மான்ஸ்டர் வாகனத்தின் தோற்றத்திற்கு மாடிஃபை செய்துள்ளார். மிஹிர் காலட் என்ற யுடியூப் சேனலில் இந்த வாகனம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த மாடிஃபை இன்னோவா காரை உருவாக்கி இருப்பவர் பெயர் தீப்ராஜ் சாரி ஆகும். எவ்வாறு எல்லாம் இந்த இன்னோவா கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டு உள்ளது என்பதை இந்த வீடியோவில் தெளிவாக அறியலாம். அதன்பின், இந்த காரை அவர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்ததையும் இந்த வீடியோவில் காண முடிகிறது.

toyota innova transformed into off-roader

தீப்ராஜ் சாரி இதற்கு முன்னர் மாருதி 800 கார் ஒன்றையும் இவ்வாறு மாற்றி இருந்தார். அந்த மாடிஃபை மாருதி 800 காரின் படங்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின. இந்த மாடிஃபை இன்னோவா காரை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இந்த காரில் சென்றீர்கள் என்றால், நிச்சயமாக அனைவரது கவனமும் உங்கள் மீதுதான் இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு பரந்த உடலமைப்பை இந்த கார் கொண்டுள்ளது.

காரின் முன்பக்க பம்பர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உலோக பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. ஆதலால், இந்த காரை ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பயமில்லாமல் கொண்டு செல்லலாம். இதற்கேற்ப 37 இன்ச்சில் டயர்கள், இரும்பு ரிம்கள் உடன் பொருத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 1-இல் இருந்து 1.5 அடி வரையிலான உயரத்திற்கு படிக்கட்டில் ஏறி, காருக்கு உள்ளே நுழைய வேண்டும்.

toyota innova transformed into off-roader

டொயோட்டா இன்னோவா காரின் சேசிஸ் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதால், முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் குறைந்துள்ளது. காரில் பின் கதவு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, 3 கதவுகளை கொண்ட ஆஃப்-ரோடு வாகனமாக இது மாறியுள்ளது. இவற்றுடன் காரின் சஸ்பென்ஷனும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடிஃபிகேஷனில் காரில் பொருத்துவதற்காக பெரும்பாலான பாகங்களை அருகில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பெற்றதாக தீப்ராஜ் வீடியோவில் தெரிவித்துள்ளார். இதனால், காரில் பொருத்தப்பட்டுள்ள சில பாகங்கள் எந்தெந்த வாகனத்துடையது என்பது தீப்ராஜ்க்கு தெரியவில்லை. வாகனத்தின் உயரம் அதிகரித்ததால், அதற்கேற்ப சஸ்பென்ஷன் செட்-அப்களும் கஸ்டமைஸ் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

toyota innova transformed into off-roader

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீப்ராஜ் இதற்கு முன்னர் மாருதி 800 காரை இவ்வாறு மாற்றி இருந்தார் என கூறினோம் அல்லவா. அந்த மாடிஃபை மாருதி 800 காரை விட இந்த மாடிஃபை டொயோட்டா இன்னோவா கார் பார்ப்பதற்கு இன்னும் அசத்தலாக உள்ளது. இருப்பினும், இவ்வாறான மாடிஃபிகேஷன்களுக்கு போலீஸார் அனுமதி வழங்குவதில்லை என்பதை மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 16, 2023, 18:44 [IST]
English summary
Toyota innova transformed into off road monster check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X