வேற வேற பெயர்களில் களமிறங்கும் டொயோட்டா இன்னோவா! இது எதுவும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இதன் அடிப்படையிலான கார் ஒன்றை டொயோட்டா நிறுவனம் தற்போது மலேசியாவில் (Malaysia) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் (Toyota Innova Zenix) என பெயரிடப்பட்டுள்ளது.

மலேசிய சந்தைக்கான டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார், இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பின் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவேதான், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரும் உள்ளது.

Toyota Innova Zenix

இதன்படி டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி பகல் நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 18 இன்ச் அலாய் வீல்கள், ட்யூயல் டோன் ஓஆர்விஎம்கள், கருப்பு நிற 'B' மற்றும் 'C' பில்லர்கள் ஆகியவையும், டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை 2.0 V மற்றும் 2.0 HEV ஆகும். அதே நேரத்தில் இந்த கார் அங்கு மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அத்துடன் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Toyota Innova Zenix Display

இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இதுதவிர அடாஸ், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பனரோமிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் கொடுக்கப்பட்ட அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் காரிலும் வழங்கப்பட்டுள்ளன.

அவை 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில், மலேசியாவில் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இருந்து ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டு, மாருதி சுஸுகி இன்விக்டோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் ஜூலை 5ம் தேதி மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலைகள் எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு கிடைத்துள்ள அதே பிரம்மாண்டமான வரவேற்பு டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் மற்றும் மாருதி சுஸுகி இன்விக்டோ ஆகிய கார்களுக்கும் கிடைக்கலாம். இதில், மாருதி சுஸுகி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை விட அதிக விலையில் வரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 23, 2023, 23:55 [IST]
English summary
Toyota innova zenix launched in malaysia all you need to know
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+