30 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கார் டொயோட்டா கார்! விலைய கேட்டா அசந்துருவீங்க!
டொயோட்டா நிறுவனம் ஜப்பானில் தனது ப்ரீயஸ் காரில் பிஎச்இவி வெர்ஷனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீயஸ் கார் ஜப்பானில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் உள்ள இசட் வேரியன்டில் இந்த பிஎச்இவி வெர்ஷனை புகுத்தியுள்ளது. இந்த பிஎச்இவி என்றால் பிளக் இன் எலெக்ட்ரிக் வாகனமாகும். இந்த வாகனத்தை சார்ஜ் போட்டும் பயன்படுத்தலாம் பெட்ரோல் மூலமும் பயன்படுத்தலாம்.
இந்த காரில் அதிக கொள்ளளவு கொண்ட பேட்டரி டிரைவ் உள்ளது. அது அதிக பவரை வெளிப்படுத்தும் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அதிக திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜினும் இந்த காருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 223 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

இந்த ப்ரீயஸ் கார் 19 இன்ச் டயருடன் 30.1 கி.மீ மைலேஜையும், 17 இன்ச் டயரில் 30.1 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த காரில் இவி டிரைவ் மோட் இருக்கிறது. இது முழு சார்ஜில் 19 இன்ச் டயருடன் 87 கி.மீ ரேஞ்சையும், 17 இன்ச் டயரில் 105 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்த காரில் 5ம் தலைமுறை ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.7 நொட்டியில் எட்டி பிடிக்கிறது. மேலும் இந்த காரில் ரீஜெனரேஷன் ப்யூஸ்ட் இருக்கிறது. இது மலைப் பிரதேசங்களில் பயணிக்கும் போது அடிக்கடி பிரேக் பிடிக்கும் பயணிக்கும் சூழ்நிலைகளில் அதிகம் பயன்படும்.

நீண்ட தூர பயணத்தின் போது இந்த ஹைபிரிட் தொழிற்நட்பம் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும், முக்கியமான வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க உதவும், மோட்டார் மற்றும் இன்ஜின் உதவியுடன் இந்த பிளக் இன் ஹைபிரிட் வாகனம் மிகப்பெரிய அளவில் உதவியைச் செய்யும். சாதாரண ஹைபிரிட் காரில் வெளிப்புறத்திலிருந்து சார்ஜ் ஏற்ற முடியாது.
ஆனால் இந்த பிளக் இன் ஹைபிரிட் காரில் நீண்ட தூரப் பயணம் அல்லது குறுகிய நேரத்தில் பேட்டரியில் சார்ஜ் ஏற்ற பயன்படுத்த முடியும். இந்த கார் வெளிப்புற தோற்றத்தில் அதே போல தான் இருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஒரு கலர் ஸ்கீம் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்டாலிக் லோயர் கிரில், ஸ்மோக்டு டெயில் லைட் ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது. மேலும் இந்த காரில் மை ரூம் மோட் இருக்கிறது. இதில் ஏசி மற்றும் ஆடியோ சிஸ்டம் வெளிப்புறத்திலிருந்து சார்ஜ் ஏறும் பேட்டரியில் இயங்கும் திறன் கொண்டது. இது சார்ஜ் ஏறும் நேரத்திலும் வேலை செய்யும் அம்சம் கொண்டது.
இந்த கார் ஜப்பானில் 4.60 லட்சம் ஜப்பான் யென் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் ரூ27.88 லட்சமாகும். இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் வரவேற்பு இருக்குமா? அதுவும் இவ்வளவு விலையில் இந்த காரை இந்தியர்கள் வாங்குவார்களா? இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








