Toyota Raize கார் இவ்ளோ மைலேஜை வாரி வழங்குமா! அப்ப கண்ணை மூடிட்டு வாங்கீரலாம்! விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) போன்ற கார்கள் இந்த செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக உள்ளன.

டொயோட்டா நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) என்ற காரை விற்பனை செய்து வந்தது. ஆனால் அந்த காரின் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. எனினும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) என்ற பெயரில் டொயோட்டா நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ததுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Toyota Raize Name Trademarked

முன்பு விற்பனை செய்யப்பட்டு வந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரானது, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். சுஸுகி-டொயோட்டா இடையேயான கூட்டணியின் மூலம் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து, டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது.

தற்போது அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதால், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா நிறுவனத்திற்கு ஒரு கார் கூட இல்லை. எனவே டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரை வேறு ஒரு பெயரில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Toyota Urban Cruiser

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 2 புதிய பெயர்களை பதிவு செய்துள்ளது. அவை ரைஸ் (Raize) மற்றும் ரைஸ் ஸ்பேஸ் (Raize Space) ஆகும். மாருதி பிரெஸ்ஸா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனுக்கு இந்த பெயர்கள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அனேகமாக டொயோட்டா நிறுவனம் 5 சீட்டர் மாடல் மட்டுமல்லாது, 7 சீட்டர் மாடலையும் விற்பனைக்கு களமிறக்கலாம் என தெரிகிறது. எனவேதான் ரைஸ் ஸ்பேஸ் என்ற பெயரையும் கூடுதலாக பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 7 சீட்டர் மாடலுக்கு ரைஸ் ஸ்பேஸ் என்ற பெயர் பயன்படுத்தப்படலாம்.

Toyota Raize Front Profile

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர், K15C பெட்ரோல் (Petrol) இன்ஜின்தான், டொயோட்டா ரைஸ் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 101 பிஎஸ் பவர் மற்றும் 136 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய சக்தி வாய்ந்தது.

இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். இதுதவிர டொயோட்டா ரைஸ் காரில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த காரின் இன்ஜின் அதிகபட்சமாக 88 பிஎஸ் பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கலாம்.

ஆனால் சிஎன்ஜி மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவிற்கு சுமார் 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா ரைஸ் காரின் மைலேஜூம் (Mileage) இதே அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் 7 சீட்டர் மாடலை டொயோட்டா நிறுவனம் களமிறக்கினால், அதற்கு டொயோட்டா ரைஸ் என்ற பெயர் சூட்டப்படலாம். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டொயோட்டா ரைஸ் காரின் ஆரம்ப விலை (Price) 9 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஒருவேளை இந்த 2 பெயர்களையும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனுக்கு டொயோட்டா நிறுவனம் பயன்படுத்தவில்லை என்றால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனுக்கு பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இந்த காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டிலும் களமிறக்கவுள்ளது. இந்த காருக்கு ரைஸ் பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

முன்னதாக டொயோட்டா நிறுவனம் டைசர் (Toyota Taisor) என்ற பெயரையும் கூட இந்தியாவில் பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களின் டொயோட்டா வெர்ஷன்களில் ஏதேனும் ஒன்றுக்கு இந்த பெயர் கூட சூட்டப்படலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் வெளியிடவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் டொயோட்டா வெர்ஷன் வேறு ஒரு பெயரில், குறிப்பாக ரைஸ் என்ற பெயரில் மீண்டும் வந்தால், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலேயே அதன் விற்பனை சிறப்பாகதான் இருந்தது. அத்துடன் வேகமாக வளர்ந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரீ-எண்ட்ரி கொடுப்பது, டொயோட்டா நிறுவனத்திற்கும் அவசியமான ஒன்றுதான்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2023, 15:05 [IST]
English summary
Toyota raize space name trademarked maruti suzuki brezza based new compact suv
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X