எவ்வளவு பேர் நம்பிக்கை வெச்சிருக்காங்க!! டொயோட்டா இப்படி பண்ணியிருக்க கூடாது... குமுறும் வாடிக்கையாளர்கள்!
டொயோட்டா (Toyota) அமெரிக்காவில் சுமார் 18.5 இலட்ச ஆர்.ஏ.வி4 எஸ்யூவி கார்களை திரும்ப அழைக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.ஏ.வி4 கார்களில் தீ விபத்து உண்டாவதற்கான பழுதுகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் பின்னர் பழுதுபார்ப்பிற்காக மீண்டும் உற்பத்தி செய்த நிறுவனத்தால் திரும்ப அழைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். உற்பத்தி பணிகளில் இருந்த தவறுகளை பின்னர் கால தாமதமாக கண்டறியும்போது, இவ்வாறான திரும்ப அழைப்புகள் ஆட்டோமொபைல் நிறுவனங்களால் முன் எச்சரிக்கையாக மேற்கொள்ளப் படுகின்றன.

பிராண்டின் பெயர் கெடக் கூடாது என்பதற்காகவும், அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இந்த வகையில், டொயோட்டா நிறுவனம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஆர்.ஏ.வி4 கார்கள் திரும்ப அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் சுமார் 18.5 இலட்ச டொயோட்டா ஆர்.ஏ.வி4 எஸ்யூவி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. இதில் ஹைலைட் என்னவென்றால், இவை யாவும் அமெரிக்காவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். ஆர்.ஏ.வி4 கார்கள் திரும்ப அழைக்கப்படுவதற்கு காரணம், இந்த கார்களில் தீப்பிடிக்கும் அபாயம் கண்டறியப்பட்டதினால் ஆகும்.

அதாவது, இந்த கார்களின் பேட்டரிகளில் இருந்து தீ உருவாக வாய்ப்புள்ளதை டொயோட்டா நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால், திரும்ப சர்வீஸ் செண்டர்களுக்கு அழைக்கப்படும் ஆர்.ஏ.வி4 கார்களில் பேட்டரிக்கான கிளாம்ப் மாற்றி கொடுக்கப்படும். இந்த பழுது பார்ப்பு வேலைகள் அனைத்தையும் இலவசமாக செய்துக் கொடுக்க டொயோட்டா முடிவெடுத்து உள்ளது.
2013- 2018ஆம் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட டொயோட்டா ஆர்.ஏ.வி4 கார்கள் இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கைக்கு உட்படுகின்றன. இதுகுறித்து டொயோட்டா கூறுவதாவது, 2013- 2018ஆம் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.ஏ.வி4 கார்களின் 12-வோல்ட் பேட்டரிகளுக்கு சிறிய அளவிலான தலைப்பகுதி வழங்கப்பட்டுள்ளதால், அவை போதுமான அளவிற்கு இறுக்கமானதாக இல்லை.

இதனால், பேட்டரியை பிடித்துக் கொள்ளும் கிளாம்ப் முறையாக செயல்படாமல் போகிறது. இருப்பினும், கிளாம்பில் இருந்து பேட்டரி வெளியே கழன்று வருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், வேகமாக வளைவுகளில் திரும்பும்போது பேட்டரியில் இருந்து தீப்பொறி உண்டாகி, ஆர்.ஏ.வி4 காரில் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை டொயோட்டா கண்டறிந்துள்ளது.
அமெரிக்காவில் மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட ஆர்.ஏ.வி4 கார்களை வாங்கியுள்ளவர்களை டொயோட்டா டீலர்கள் தொடர்புக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். அவர்கள் கூறும் இடத்திற்கு சென்றால், காரின் பேட்டரிக்கான ஹோல்ட்-ஆன் கிளாம்ப், பேட்டரியை வைக்கும் ட்ரே மற்றும் பாசிட்டீவ் முனைக்கான கவர் உள்ளிட்டவை மாற்றிக் கொடுக்கப்படும். இந்த பழுது பார்ப்பு பணிகள் வருகிற டிசம்பர் மாத இறுதியில் இருந்து துவங்கப்படும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்கா என்ற ஒரே நாட்டில் மட்டும் 18.5 இலட்ச விலையுயர்ந்த டொயோடடா ஆர்.ஏ.வி4 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்பதே முதலில் ஆச்சிரியம். அடுத்த ஆச்சிரியம் அவை யாவும் திரும்ப அழைக்கப்படுவதுதான். டொயோட்டா நிறுவனம் காரின் பேட்டரியை மாற்றவில்லை, அதற்கு பதிலாக பேட்டரியை அசையாமல் பிடித்துக் கொள்ளும் கிளாம்ப்பை மாற்றிக் கொடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications









