டொயோட்டாவுக்கு இவ்வளவு தாராள மனசா... லட்சங்களில் விலையை குறைத்து ஷாக் கொடுத்துடுச்சு!!

டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை திருத்தியமைத்துள்ளது. இதன்படி இந்த வாகனத்தின் ஆரம்ப விலை வெகுவாக குறைந்துள்ளது. எந்த அளவிற்கு விலை குறைந்துள்ளது? டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கின் புதிய விலைகள் எவ்வளவு? என்பவற்றிற்கான விடைகளை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

ஜப்பான் ஸ்டைலில் டொயோட்டா தயாரிக்கும் பிக்அப் ட்ரக் வாகனமே ஹைலக்ஸ் ஆகும். பிஎஸ்6 என்ஜின் உடன் இந்த வாகனம் இந்தியாவில் சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது திருத்தப்பட்டு இருப்பதன்படி, ஹைலக்ஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை இனி ரூ.30.40 லட்சமாகும். இது ஹைலக்ஸின் முந்தைய ஆரம்ப விலையை காட்டிலும் சுமார் ரூ.3.59 லட்சம் குறைவாகும்.

டொயோட்டா ஹைலக்ஸை இனி இந்த விலையிலேயே வாங்கிடலாம்!!

ஆனால் மறுப்பக்கம் ஹைலக்ஸின் ஹை வேரியண்ட்டின் விலைகள் ஒரு லட்சத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளன. ஹைலக்ஸ் ஹை வேரியண்ட்டின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் தேர்வில் ரூ.1.35 லட்சமும், ஆட்டோமேட்டிக் தேர்வில் ரூ.1.10 லட்சமும் உயர்த்தப்பட்டுள்ளது. டொயோட்டா ஹைலக்ஸின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை இனி ரூ.37.90 லட்சம் ஆகும்.

Toyota Hilux Price
Variant New Price Old Price
Standard MT ₹30.40 Lakh ₹33.99 Lakh
Hight MT ₹37.15 Lakh ₹35.80 Lakh
High AT ₹37.90 Lakh ₹36.80 Lakh

சரியாக கடந்த 2022ஆம் ஆண்டில் இதே மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் பிஎஸ்6 வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் திருத்தப்பட்டுள்ளன. ஹைலக்ஸிற்கான 2ஆம் கட்ட முன்பதிவுகளை ஏற்பதை கடந்த ஜனவரி மாதத்தில் டொயோட்டா துவங்கியது. தோற்றத்தை பொறுத்தவரையில், டபுள்-கேப் எனப்படும் இரு இருக்கை வரிசைகளுடன் லோடு கேரி பகுதியை கொண்ட பிக்அப் ட்ரக் வாகனம் இது ஆகும்.

டொயோட்டா ஹைலக்ஸை இனி இந்த விலையிலேயே வாங்கிடலாம்!!

இரு இருக்கை வரிசைகளுடன் லோடு கேரி பகுதியை கொண்டிருப்பதால் ஹைலக்ஸ் அளவில் நன்கு பெரியது மற்றும் நீளமானது. இதற்கேற்ப இந்த வாகனத்தின் பக்கவாட்டுகளில் பிளாஸ்டிக் பேனல்கள் பொருத்தப்பட்டு வாகனத்தை இன்னும் முரட்டுத்தனமானதாக காட்டுகின்றனர். ஹைலக்ஸின் முன்பக்கத்தில் அறுகோண டிசைனில் க்ரோம் ஹைலைட்களுடன் பெரிய க்ரில் பகுதி வழங்கப்படுகிறது. இதன் இரு பக்கங்களிலும், பக்கவாட்டிற்கும் சேர்த்து வளைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்படுகின்றன.

பின்பக்க தோற்றம் மிகவும் எளிமையானதாக வழங்கப்பட்டாலும், க்ரோம் ஹைலைட்கள் அதிகம் கொடுக்கப்படுகின்றன. இந்த பிக்அப் ட்ரக்கின் நீளம் 5,325மிமீ, அகலம் 1,855மிமீ, உயரம் 1,815மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 3,085மிமீ ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் நீளமான வாகனங்களுள் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கும் ஒன்றாகும்.

டொயோட்டா ஹைலக்ஸை இனி இந்த விலையிலேயே வாங்கிடலாம்!!

ஹைலக்ஸின் கேபின் டொயோட்டாவின் பிரபலமான ஃபார்ச்சூனரை ஒத்து காணப்படுகிறது. டேஸ்போர்டின் டிசைன் சற்று வேறுப்பட்டாலும், டச் ஸ்க்ரீன், க்ளைமேட் கண்ட்ரோல் பேனல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்டேரிங் சக்கரம் மற்றும் முன் இருக்கைகள் ஃபார்ச்சூனர் காரில் இருப்பதை போன்றே வழங்கப்படுகின்றன. டேஸ்போர்டில் 8.0-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஆனது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடியதாக வழங்கப்படுகிறது.

ஹைலக்ஸில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 204 எச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். இந்த பிக்அப் ட்ரக்கில் என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது வாகனத்தின் அனைத்து சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் 4-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் வாயிலாக கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 19:12 [IST]
English summary
Toyota revised prices of hilux pickup truck
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+