கப்பல் மாரி இருக்கு! 27 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார் விலை இவ்ளோதானா! இன்னோவாவை மக்கள் அடியோட மறக்க போறாங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த கூட்டணி அடிப்படையில், மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கார்களை பரிமாறி கொள்கின்றன.

இந்த 2 நிறுவனங்களின் கூட்டணியில் இருந்து வெகு சமீபத்தில் வெளிவந்த கார் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரின், ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில் இன்னும் பல்வேறு கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

Toyota Rumion

இதில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின், ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தென் ஆப்ரிக்க சந்தையில் கடந்த 2021ம் ஆண்டே, டொயோட்டா ரூமியான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

இதை தொடர்ந்து இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் மாதம், டொயோட்டா ரூமியான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

Toyota Rumion Interior Design

பொதுவாக கார் நிறுவனங்கள் ஒரே காரை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்யும். ஆனால் தென் ஆப்ரிக்க சந்தையை போல், இந்தியாவிலும் டொயோட்டா ரூமியான் என்ற பெயரிலேயே இந்த கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரூமியான் என்ற பெயரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா காரில் வழங்கப்படும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், டொயோட்டா ரூமியான் காரிலும் வழங்கப்படவுள்ளன. இதன்படி பார்த்தால், டொயோட்டா ரூமியான் காரில் 103 பிஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

மாருதி சுஸுகி எர்டிகா காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. எனவே டொயோட்டா ரூமியான் காரிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். டொயோட்டா ரூமியான் காரில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டால், அது ஒரு கிலோவிற்கு 26-27 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், டொயோட்டா ரூமியான் காரின் டிசைனில் (Design) ஒரு சில மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரில் உள்ள அதே வசதிகள்தான் (Features), டொயோட்டா ரூமியான் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ரூமியான் கார், 7 சீட்டர் மாடலாக வரலாம். எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) இது சிறந்த மாற்றாக இருக்கும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட, டொயோட்டா ரூமியான் மிகவும் குறைவான விலையில்தான் (Price) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 19.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 25.68 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை வெறும் 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13 அல்லது 14 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு மாற்றாக குறைவான விலையில், அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்யக்கூடிய மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு டொயோட்டா ரூமியான் சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 7, 2023, 17:52 [IST]
English summary
Toyota rumion india launch by september expected price design mileage features
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+