27 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! 2 குடும்பங்கள் ஒன்னா உக்காந்து ஜாலியா போகலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) கார், அடுத்த மாதம், அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரலாம் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரும் ஆகஸ்ட் மாதமே விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன. இந்த காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா ரூமியான் என்பது, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

Toyota Rumion

டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதன் அடிப்படையில் டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களும் கார்களை பரிமாறி கொள்கின்றன. இந்த வரிசையில் வரவுள்ள ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான்.

இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் எம்பிவி லைன்-அப்பில் இன்னோவா க்ரிஸ்ட்டா (Innova Crysta) காருக்கு கீழாக, ரூமியான் கார் நிலைநிறுத்தப்படவுள்ளது. எனவே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை காட்டிலும் மிகவும் குறைவான விலையில் டொயோட்டா ரூமியான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Toyota Rumion Interior

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.64 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். கிட்டத்தட்ட இதே விலையில்தான் டொயோட்டா ரூமியான் காரும் விற்பனைக்கு களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா ரூமியான் கார் ஏற்கனவே தென் ஆப்ரிக்க சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் சமீபத்தில்தான் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்துதான் இந்திய சந்தையில் ரூமியான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்திய சந்தைக்கான டொயோட்டா ரூமியான் காரில், 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கான மாருதி சுஸுகி எர்டிகா காரில், பெட்ரோல் இன்ஜின் உடன் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே டொயோட்டா ரூமியான் காரிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டால், டொயோட்டா ரூமியான் கார் ஒரு கிலோவிற்கு சுமார் 27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ரூமியான் கார், 7 சீட்டர் மாடலாக வரவுள்ளது. எனவே அதிக குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஓரளவிற்கு விலை குறைவான அதே நேரத்தில் அதிக மைலேஜ் தரக்கூடிய ஒரு காரை தேடி கொண்டிருந்தால், அதற்கு டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை மிகவும் அதிகம் என்பதால், அதற்கு மாற்றாக டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து ஓரளவிற்கு விலை குறைவான ஒரு காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கும் கூட, டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 23:53 [IST]
English summary
Toyota rumion india launch next month all details here
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+