7 பேர் போலாம்! பைக் மாதிரி மைலேஜ் தரும் டொயோட்டா கார் களமிறங்கியது! உண்மையாவே விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா ரூமியான் காரில், 7 பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும்.

இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதால், மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும், கடந்த சில வருடங்களாக, தங்களுக்குள் கார்களை பரிமாறி கொள்கின்றன.

Toyota Rumion

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில் உருவான பல்வேறு கார்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது களமிறங்கியுள்ள ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான். டொயோட்டா ரூமியான் காரில் பல்வேறு வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Toyota Rumion Display

இதுதவிர டொயோட்டா ஐ-கனெக்ட் தொழில்நுட்ப வசதியும், ரூமியான் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அதிநவீன வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் டொயோட்டா ரூமியான் கார், சாலையில் ஒருவர் விடாமல் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், சிறப்பான டிசைன் (Design) செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா ரூமியான் காரின் முன் பகுதியில் வழங்கப்பட்டிருப்பது புத்தம் புதிய க்ரில் ஆகும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காருடைய முந்தைய மாடலின் க்ரில் அமைப்பை மனதில் வைத்து, இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர ட்யூயல் டோன் அலாய் வீல்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவையும் கவனம் ஈர்க்க கூடியவையாக உள்ளன.

Toyota Rumion Airbags

செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா ரூமியான் கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் இல்லை. டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில் பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

அதிகபட்சமாக 102 பிஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் சிஎன்ஜி வேரியண்ட்களிலும், இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது பவர் அவுட்புட் சற்று குறையும். டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் பவர் அவுட்புட் 87 பிஹெச்பி மற்றும் 121 என்எம் ஆகும். சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரும் சிறப்பான மைலேஜை (Mileage) வாரி வழங்கும். டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும்.

இந்திய சந்தையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 10.29 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.68 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

S, G மற்றும் V என டொயோட்டா ரூமியான் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அதே நேரத்தில் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) டொயோட்டா ரூமியான் கார் களமிறக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) ஆகிய கார்களுடன், டொயோட்டா ரூமியான் போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.64 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன் ஒப்பிடும்போது (Comparison), டொயோட்டா ரூமியான் காரின் விலை சற்று அதிகம்தான். ஆனால் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களின் பிராண்டு வேல்யூ வெவ்வேறானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகம் பேர் பயணிக்க கூடிய அதே நேரத்தில், சிறப்பான மைலேஜ் கிடைக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Monday, August 28, 2023, 13:52 [IST]
English summary
Toyota rumion launched price mileage features design comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X