இந்த பிராண்ட்-நியூ டொயோட்டா காரை வாங்குற பணத்தில் இந்த கார்களை வாங்கலாம்!! விலையில் பெருசா வித்தியாசம் இல்லை!

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா ரூமியான் எம்பிவி கார் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில், 5 விதமான நிறத்தேர்வுகளில் ரூமியான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

இந்த புதிய டொயோட்டா எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.29 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. எர்டிகாவை போல், புதிய டொயோட்டா ரூமியான் காரையும் டீசல் என்ஜின் தேர்வில் வாங்க முடியாது. ஏனெனில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளில் மட்டுமே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

toyota rumion mpv car alternatives

இதில் பெட்ரோல் வேரியண்ட்களில் பொருத்தப்படும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 137 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படும். ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்களில் 87 பிஎச்பி மற்றும் 121 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே இயக்க ஆற்றல் கிடைக்கும்.

சிஎன்ஜி வேரியண்ட்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றில் மைலேஜ் அதிகமாக கிடைக்கும். மேலும், பெட்ரோலை விட சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு. புதிய ரூமியானின் பெட்ரோல் & சிஎன்ஜி இரு விதமான வேரியண்ட்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்ட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. அதேநேரம், பெட்ரோல் வேரியண்ட்களில் மட்டும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டரை பெறலாம். ரூமியானின் 3 வேரியண்ட்களாவன, எஸ் (S), ஜி (G) & வி (V) என்பன ஆகும்.

toyota rumion mpv car alternatives

இதில் எஸ் வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் அல்லது சிஎன்ஜி தேர்வில் வாங்கலாம். ஆனால், 2ஆம் நிலை வேரியண்ட்டான ஜி வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும். அதேபோல், இந்த வேரியண்ட் ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்காது. டாப் வேரியண்டை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் என 2 விதமான தேர்வுகளிலும் வாங்கலாம். ஆனால் ரூமியான் வி வேரியண்ட் சிஎன்ஜி தேர்வில் கிடைக்காது.

Variant Prices
S MT ₹10.29 Lakh
S AT ₹11.89 Lakh
G MT ₹11.45 Lakh
V MT ₹12.18 Lakh
V AT ₹13.68 Lakh
S MT CNG ₹11.24 Lakh

டொயோட்டா ரூமியானின் ஆரம்ப நிலை எஸ் வேரியண்ட்டின் மேனுவல் தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.29 லட்சம் & ரூ.11.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இதே விலைகளில் மாருதி எர்டிகா, கியா கேரன்ஸ் மற்றும் மஹிந்திரா பொலேரோ உள்ளிட்ட எம்பிவி கார்கள் பெட்ரோல் என்ஜின் - மேனுவல் தேர்வுகளில் கிடைக்கின்றன. ஆனால் இவை மூன்றில் மாருதி எர்டிகா மட்டுமே தற்போதைக்கு சிஎன்ஜி தேர்விலும் கிடைக்கிறது. ரூமியான் எஸ் வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் தேர்விலும் பெறலாம்.

toyota rumion mpv car alternatives

ரூ.11.89 லட்சம் என்கிற விலையில் கிடைக்கும் ரூமியான் எஸ் ஆட்டோமேட்டிக் காருக்கு போட்டியாக, குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை கொண்ட கார்களாக மாருதி எர்டிகா மற்றும் கியா கேரன்ஸ் உள்ளன. ரூமியான் ஜி வேரியண்ட்டின் விலை ரூ.11.45 லட்சம். இந்த வேரியண்ட்டை வாங்க பிளான் செய்வோர் கியா கேரன்ஸின் பிரஸ்டீஜ், மாருதி எக்ஸ்.எல்6-இன் ஸெட்டா மற்றும் மஹிந்திரா பொலேரோ நியோவின் என்10 வேரியண்ட்களையும் ஒரு கண்ணோட்டம் பார்க்கலாம்.

ரூமியானின் உயர்நிலை வி வேரியண்ட்டை மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் ரூ.12.18 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் தேர்வில் ரூ.13.68 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வாங்க முடியும். இவ்வளவு விலையில் வேறொரு பிராண்டின் எம்பிவி காரை மேனுவல் தேர்வில் வாங்குவதற்கு, கியா கேரன்ஸின் பிரீமியம் ஐஎம்டி வேரியண்ட்டையும், மஹிந்திரா பொலேரோ நியோ என்10 (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டையும் பார்க்கலாம். ரூ.13.68 லட்சம் என்ற விலையில் ரூமியான் வி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு இணையாக பெட்ரோல் என்ஜின் உடன் எந்த எம்பிவி காரும் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், புதிய டொயோட்டா ரூமியான் காருக்கு பதிலாக வேறொரு காரை வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரே சரியான சாய்ஸாக இருக்கும். ஆனால் அதேநேரம், கியா கேரன்ஸையும் ஓர் கண்ணோட்டம் பார்க்கலாம். ஏனெனில் ரூமியானை போன்று, கியா பிராண்டில் இருந்து சமீபத்தில் விற்பனைக்கு வந்த கார் கேரன்ஸ் எம்பிவி ஆகும். அதுமட்டுமின்றி, கேரன்ஸ் டீசல் என்ஜின் உடனும் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 30, 2023, 23:07 [IST]
English summary
Toyota rumion mpv alternatives for same prices
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X