27 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை வாங்க மக்கள் அலைமோதறாங்க! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வரிசைல நிப்பீங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
எனவே டிசைனில் இந்த 2 கார்களுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. எனினும் மாருதி சுஸுகி எர்டிகா காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், டொயோட்டா ரூமியான் காரின் டிசைனில் (Design) ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது எம்பிவி (MPV) ரக கார் என்பதால், 7 பேர் பயணம் செய்ய முடியும்.

டொயோட்டா ரூமியான் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், டிஜிட்டல் எம்ஐடி உடன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
இதுதவிர 4 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் (Electronic Stability Control - ESC) போன்ற வசதிகளும் டொயோட்டா ரூமியான் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. டொயோட்டா ரூமியான் காரின் செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 20.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும்.
இதுதவிர டொயோட்டா ரூமியான் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே 1.5 லிட்டர் இன்ஜின்தான் சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88 ஹெச்பி பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும்.
என்றாலும் சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 10.29 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.68 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இந்தியாவில் டொயோட்டா ரூமியான் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது அதிகாரப்பூர்வமான முன்பதிவு ஆகும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா ரூமியான் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதே நேரத்தில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் வரும் செப்டம்பர் 8ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், டொயோட்டா ரூமியான் காரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ரூமியான் காரை முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டொயோட்டா கார் விற்பனையில் சாதனை படைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். மாருதி சுஸுகி எர்டிகா மட்டுமல்லாது, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6) மற்றும் கியா கேரன்ஸ் (Kia Carens) உள்ளிட்ட கார்களுக்கும், டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த மாற்று தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








