7 பேர் போகலாம்! 26 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்ல மக்கள் தவம் கெடக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா ரூமியான் கார், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்தான் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி ஆகிய 2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருப்பதால், கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Toyota Rumion

டொயோட்டா ரூமியான் காரானது, பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. சிஎன்ஜி வெர்ஷனிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் அதிகபட்ச பவர் அவுட்புட் 88 ஹெச்பி மற்றும் 121.5 என்எம் மட்டுமே.

Toyota Rumion Airbags

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பவர் அவுட்புட் சற்று குறைவு மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை என்றாலும் கூட, டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வெர்ஷன் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும்.

அதாவது டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்கும். ஆனால் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். இதன் காரணமாக டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வெர்ஷனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் எதிரொலியாக டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வெர்ஷனுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காத்திருப்பு காலம் என்பது, முன்பதிவு (Booking) செய்யும் நாளில் இருந்து, கார் டெலிவரி (Delivery) செய்யப்படுவதற்கு இடையே உள்ள காலம் ஆகும்.

டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வெர்ஷனுக்கான காத்திருப்பு காலம் அக்டோபர் (October) மாதம் வெறும் 16 வாரங்களாக மட்டுமே இருந்தது. ஆனால் நடப்பு நவம்பர் (November) மாதத்தில் இது 78 வாரங்களாக உயர்ந்துள்ளது. அதாவது 78 வாரங்கள் காத்திருந்தால் மட்டுமே டொயோட்டா ரூமியான் சிஎன்ஜி வெர்ஷன் உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.

ஆனால் டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் வெர்ஷன்களுக்கான காத்திருப்பு காலம் குறைவாகதான் உள்ளது. டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் வெர்ஷன்களுக்கான காத்திருப்பு காலம் நடப்பு நவம்பர் மாதத்தில் 26 வாரங்களாக மட்டுமே இருக்கிறது. சிஎன்ஜி வெர்ஷனுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு.

அதிக மைலேஜ் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி வெர்ஷனை வாங்க ஆர்வம் காட்டுவதையே இது காட்டுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை (Price) 10.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.68 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ரூமியான், 7 சீட்டர் கார் ஆகும். எனவே அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடியதாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா ரூமியான் கார், மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 16, 2023, 13:32 [IST]
English summary
Toyota rumion november waiting period petrol cng variants
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+