27 கிமீ மைலேஜ் குடுக்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! இன்னோவாவுக்கு பதிலா இதை கண்ணை மூடிட்டு வாங்கலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா ரூமியான் காரின் அறிமுக தேதி நெருங்கி வருகிறது.

அதற்கு முன்னதாக டொயோட்டா ரூமியான் காரின் அதிகாரப்பூர்வ டிவிசி வீடியோ (TVC Video) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் டொயோட்டா ரூமியான் காரின் முக்கியமான வசதிகளை நம்மால் பார்க்க முடிகிறது. 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்ட வசதிகள், இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.

Toyota Rumion

இதுதவிர ரியர் ஏசி வெண்ட்கள் உடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் ஆகிய வசதிகளையும் நம்மால் காண முடிகிறது. இந்த வீடியோவில் டொயோட்டா ரூமியான் காரின் எம்ஐடி திரையானது, ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) என காட்டுகிறது.

எனவே டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் இன்ஜின், ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம் என கருதப்படுகிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் பெட்ரோல் இன்ஜின் இதே அளவிலான மைலேஜைதான் வழங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Toyota Rumion TVC

மாருதி சுஸுகி எர்டிகா காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான், டொயோட்டா ரூமியான் காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர டொயோட்டா ரூமியான் காரில் சிஎன்ஜி வெர்ஷனும் கிடைக்கும். சிஎன்ஜி வெர்ஷனில் பொருத்தப்பட்டிருப்பதும் இதே இன்ஜின் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88 பிஎஸ் பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி இன்ஜின் நல்ல மைலேஜை வழங்கும். மாருதி சுஸுகி எர்டிகா காரில் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது.

இதே அளவிலான மைலேஜை டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வெர்ஷனிலும் நாம் எதிர்பார்க்கலாம். மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா ரூமியான் ஆகிய இரண்டும் ஒரே கார்கள்தான் என்றாலும் கூட, வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக டிசைனில் ஒரு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி மாருதி சுஸுகி எர்டிகா காருடன் ஒப்பிடும்போது, டொயோட்டா ரூமியான் காரில் க்ரில் அமைப்பு, முன் பக்க பம்பர் போன்றவை சற்று வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை (Price) 8.64 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். கிட்டத்தட்ட இதே அளவிலான விலையில்தான் டொயோட்டா ரூமியான் காரும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. எனவே மிகவும் விலை உயர்ந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) எம்பிவி காரை வாங்க முடியாத வாடிக்கையாளர்கள், டொயோட்டா ரூமியான் எம்பிவி காரை தேர்வு செய்யலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ரூமியான் கார், 7 சீட்டர் மாடல் ஆகும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகவும் ஏற்றதாக இருக்கும். இன்னும் ஒரு சில மாதங்களில் டொயோட்டா ரூமியான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 24, 2023, 21:25 [IST]
English summary
Toyota rumion tvc video expected price features and mileage
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+