27 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார் விலை இவ்ளோதானா! 2 ஃபேம்லி ஒன்னா போகலாம்! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டொயோட்டா ரூமியான் தற்போது இந்திய சந்தையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருப்பதால், அவை கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டிசைனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா ரூமியான் ஆகிய 2 கார்களும் கிட்டத்தட்ட ஒன்று போலவே உள்ளன.

Toyota Rumion

மாருதி சுஸுகி எர்டிகா காருடன் ஒப்பிடும்போது, டொயோட்டா ரூமியான் ஒரு சில மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது. டொயோட்டா ரூமியான் காரில், புதிய பம்பர், புதிய ட்யூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரில் இருப்பதை போன்ற க்ரில் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் வசதிகள் மற்றும் 7 சீட்டர் அமைப்பு ஆகியவை அப்படியே மாருதி சுஸுகி எர்டிகா காரில் இருப்பதை போன்று கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா ரூமியான் காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Toyota Rumion Display

அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல் தவிர, டொயோட்டா ரூமியான் காரில், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி இன்ஜினின் பவர் அவுட்புட் 88 ஹெச்பி மற்றும் 121.5 என்எம் மட்டுமே. இருந்தாலும் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது நல்ல மைலேஜ் (Mileage) கிடைக்கும். டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குமாம்.

இவை டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வமான மைலேஜ் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை (Price) 8.64 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டொயோட்டா ரூமியான் காரும் இந்திய சந்தையில் கிட்டத்தட்ட இதே விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ரூமியான் தற்போதைய நிலையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்னும் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவிலேயே ரூமியான் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக உள்ளது. எனவே இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 19.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.05 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எனவே டொயோட்டா பிராண்டில், இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு மாற்றாக, அதிகம் பேர் பயணம் செய்யக்கூடிய அதே நேரத்தில் விலை குறைவான ஒரு காரை எதிர்பார்ப்பவர்களுக்கு டொயோட்டா ரூமியான் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். டொயோட்டா ரூமியான் நல்ல மைலேஜ் தரக்கூடிய கார் என்பது, அதன் கூடுதல் பலம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 17:00 [IST]
English summary
Toyota rumion unveiled in india engine mileage expected price
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+