டொயோட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணம் இதானா! போட்டி நிறுவனங்களுக்கு இந்நேரம் வேர்த்து கொட்டியிருக்கும்!

செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் செப்டம்பர் மாதத்திற்கான வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதன்படி டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23,590 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 22,168 ஆகும். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 1,422 ஆகும்.

Toyota Innova Hycross

ஆனால் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக வெறும் 15,378 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23,500 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் 53 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாத அளவில் மட்டுமல்லாது, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத கால அளவிலும் (ஏப்ரல்-செப்டம்பர்), டொயோட்டா நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், 1,23,939 கார்களை விற்பனை செய்துள்ளது.

Toyota Rumion

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வெறும் 91,843 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. எனவே கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 35 சதவீத வளர்ச்சியை டொயோட்டா நிறுவனம் பதிவு செய்து அசத்தியுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder), இன்னோவா ஹைக்ராஸ் (Innova Hycross) மற்றும் ரூமியான் (Rumion) உள்ளிட்ட கார்கள்தான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. இதில் டொயோட்டா ரூமியான் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியில் டொயோட்டா நிறுவனம் பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கார்களில் ஒன்றுதான் டொயோட்டா ரூமியான்!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணிதான் மிக முக்கியமான காரணம் என்பது எங்கள் கருத்து. டொயோட்டா-மாருதி சுஸுகி கூட்டணியின் மூலம் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே டொயோட்டா நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 4, 2023, 23:56 [IST]
English summary
Toyota sales report september 2023 53 per cent growth
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+