எலெக்ட்ரிக் காரை வாங்கி ஏமாறாதீங்க! ஹைபிரிட் கார் தான் பெஸ்ட்ன்னு டொயோட்டா சொல்லுதுபா!

இன்று ஆட்டோமொபைல் துறையே மெல்ல மெல்ல பெட்ரோல்/டீசல் கார்களை விட்டுவிட்டு எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறப்போவது குறித்து தீவிரமாக முயன்று வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் முழு எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்நிறுவனங்கள் நிலைத்து நிற்க எலெக்ட்ரிக் கார்கள் தான் கை கொடுக்கும் என நம்பி வருகின்றனர். ஆனால் டொயோட்டா நிறுவனத்திற்கு இதில் வேறு எண்ணம் இருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் காரில் தன் கவனத்தைச் செலுத்தாமல் முழு ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில் தன் கவனத்தைச் செலுத்துகிறது. இந்நிறுவனம் பிஇசட்4எக்ஸ் காரை அறிமுகப்படுத்தியது.இதன் அறிமுக விழாவிலேயே டொயோட்டா நிறுவனம் தெளிவாக தாங்கள் முழு ஹைபிரிட் கார்களை தயாரிப்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்திருந்தது.

எலெக்ட்ரிக் காரை வாங்கி ஏமாறாதீங்க! ஹைபிரிட் கார் தான் பெஸ்ட்ன்னு டொயோட்டா சொல்லுதுபா!

அனைத்து நிறுவனங்களும் எலெக்ட்ரிக் காருக்கு மாறிவரும் நிலையில் டொயோட்டா நிறுவனம் மட்டும் எலெக்ட்ரிக் காரில் கவனம் செலுத்தால் இருப்பது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் கில் பார்த் பேசியுள்ளார். அவர் பேசியதாவது : "எதிர்காலத்தில் மக்கள் விரும்பும் கார்களை தயாரிக்க தற்போது மெது மெதுவாக எங்கள் தயாரிப்புகளை மாற்றி வருகிறோம். முழுமையாக இவி கார் எதிர்காலமாக இருக்கும் என நாங்கள் நம்பவில்லை. முழு ஹைபிரிட் மற்றும் மற்ற பசுமை தொழிற்நுட்பங்கள் தான் எதிர்காலமாக இருக்க வாய்ப்புள்ளது.

பல நிறுவனங்கள் கார்பன் நியூட்டிராலிட்டியை நோக்கி நகர்வதற்காக எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை விட முழு ஹைபிரிட் வானகங்கள் தான் மாசுக் கட்டுப்பாட்டிற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என நம்புகிறேன். எலெகட்ரிக் வாகனங்களால் மாசு முற்றிலுமாக இல்லாமல் போகும் என நான் நம்பவில்லை.

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். 100 இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் சேர்ந்து 250 கிராம் கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்குகிறது என வைத்துக்கொள்வோம். அதே கார்களில் ஒரு சிறிய பேட்டரி வைக்க இடம் இருக்கிறது ஒரு காருக்கு 1.1 கிலோ வாட் ஹவர் பேட்டரியை பொருத்தினாலும் 100 கிலோ வாட் ஹவர் பேட்டரியை பொருத்த முடியும். அப்படி என்றால் பேட்டரி மூலம் சேர்ந்து ஹைபிரிட்டாக அந்த இன்ஜின் இயங்கினால் வெளியேறும் மாசு ஒரு கி.மீக்கு 205 கிராம் ஆக குறைந்துவிடும்.

ஒரு இன்ஜினை வைத்துக் கணக்கிடும் போது இது மிகச் சொற்பமாகத் தெரியலாம். ஆனால் இன்று கோடிக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஓடுகிறது. அதை வைத்துக் கணக்கிட்டால் ஏகப்பட்ட மாசு கட்டுப்பாட்டிற்குள் வரும் இதைச் செய்ய நாம் மறுத்து வருகிறோம். எலெக்ட்ரிக் கார்களை நம்பி அதன் பின்னால் செல்கிறோம். டொயோட்டா நிறுவனம் ஒன்று எலெக்ட்ரிக் கார்களுக்கு எதிரியல்ல நாங்கள் 2030ம் ஆண்டு டொயோட்டா நிறுவனம் 5.5 மில்லியன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் வாகனங்களையும், 3.5 மில்லியன் எலெக்ட்ரிக் ஹைபிரிட் வாகனங்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 7, 2023, 9:23 [IST]
English summary
Toyota says ev is bad for environment and business
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+