டொயோட்டாவோட புதிய காரின் பெயர் இதுதானா? பெயரே அட்டகாசமா இருக்குதே!
டொயோட்டா நிறுவனம் தனது புதிய காருக்கு அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரை டிரேட் மார்க் செய்துள்ளது. இந்தப் பெயரை தனது புதிய ரீ-பிராண்டிங் சப் 4 மீட்டர் எஸ்யூவி காருக்கு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சர்வதேச அளவில் மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இதன்படி இந்த இரு நிறுவனங்களும் தங்கள் கார்களை பகிர்ந்து கொண்டு வேறு வேறு பெயர்களில் அறிமுகப்படுத்துகின்றனர். இருவரும் ஒரே தொழில்நுட்பம் கொண்ட கார்களை தான் பயன்படுத்துகின்றனர்.

இப்படியாக மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் டொயோட்டா நிறுவனத்தின் அக்பன் க்ரூஸர் என்ற பெயரில் வெளியானது. இப்படியாக டொயோட்டோ நிறுவனத்தின் கார்களும் மாருதி பிராண்டில் வெளியாகியுள்ளது. தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஃபிரான்க்ஸ் காரை டொயோட்டா நிறுவனம் செய்து அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த காருக்கான பெயர் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் டொயோட்டா நிறுவனம் தற்போது அர்பன் க்ரூஸர் டைசர் என்ற புதிய பெயரை உள்ளது. இந்நிலையில் இந்த பெயரை தான் தனது காருக்கு வைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது பத்திதான் டொயோட்டோ ரசிகர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.

இப்படியாக டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்களிடையே கார்கள் பகிரப்படும் போது அதன் வெளிப்புறத் தோற்றத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன் வீல்கள் முதல் லைட்டிங் செட் அப் வரை பல விஷயங்கள் மாற்றப்படுகிறது. முற்றிலும் இரு கார்களும் வேறு வேறு லுக்கில் இருக்கும்.
உட்புறத்தில் உள்ள டிசைன் மற்றும் டேஷ் போர்டு, கலர் ஆப்ஷன் ஆகியன வேறுபடுகிறது. மற்றபடி பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. இதன்படியே தான் தற்போது பிரான்ஸ் காரும் டொயோட்டா ரிப்பேர் செய்யும் போது சில மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் காரை பொறுத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 100 எச்பி பவரையும் 147 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டாவதாக 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 90 எச்பி பவரை வெளிப்படுத்தும்.
இந்த இரண்டு இன்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டர்போ சார்ஜ் இன்ஜினுக்கு மற்றொரு ஆப்ஷனாக சிக்ஸ் ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் உள்ளது. அதேநேரம் 1.2 லிட்டர் இன்ஜினுக்கு 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.
ஃபிரான்க்ஸ் காரை வாங்கும் பலர் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு இன்ஜினை தான் அதிகம் விரும்புகின்றனர். டொயோட்டா நிறுவனம் இந்த ஒரு இன்ஜினை மட்டும் தான் எடுத்து தனது காரை செய்யப் போகிறதா அல்லது பூஸ்டர் இன்ஜினுடன் சேர்த்து செய்யப்போகிறதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஃபிரான்க்ஸ் காரை பொருத்தவரை சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது டொயோட்டா நிறுவனம் இந்த காரை எடுக்கும் போது சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கும் என எதிர்பார்க்கலாம். ஃபிரான்க்ஸ் காரில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. மேலும் இதன் டாப் வேரியண்டில் லெதர் வெராப்ட் ஷேரிங் வீல் 360 டிகிரி கேமரா ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆறு ஏர் பேக் ஆகிய அம்சங்கள் உள்ளது.
மாருதி டொயோட்டா ஒப்பந்தத்தின் படி இதுவரை பலேனோ கார் டொயோட்டா பேட்டரி கிளான்ஸா கார் ஆகவும், அர்பன் க்ரூஸர் கார் பிராசா அடிப்படையில் கொண்ட காராகவும், ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய சப் 4 மீட்டர் எஸ்யூவி கார்கள், ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்டு இன்விக்டோ கார் என பல கார்கள் இதுவரை பகிரப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறுவனம் அர்பன் க்ரூஸர் என்ற பெயரை நீண்ட நாட்களாக தனது காரின் பெயரில் வைத்து வருகிறது. அதன்படி தான் தற்போது அர்பன் க்ரூஸர் டைசர் என்ற பெயரை தேர்வு செய்துள்ளது. இந்த கார் பண்டிகை காலத்தை ஒட்டி இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை அறிமுகமாகும் போது தான் தெரியவரும்


Click it and Unblock the Notifications








