இனி கார் ஓட்ட கைகள் மட்டுமே போதும்... கால்களுக்கு வேலையே இருக்காது... டொயோட்டாவின் தரமான டெக்னாலஜி!
இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான கார்களில் கால்களைக் கொண்டே கட்டுப்படுத்தும் வகையில் பிரேக், ஆக்சலரேட்டர் மற்றும் கிளட் பெடல்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்த செட்-அப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்தியாவில் மட்டுமில்லைங்க, உலக நாடுகள் அனைத்திலும் பிரேக் (Brake), ஆக்சலரேட்டர் (Accelerator) மற்றும் கிளட் (Clutch) ஆகிய பெடல்கள் கால்கள் வாயிலாகக் கட்டுப்படுத்தும் வகையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. கார், பேருந்து மற்றும் டிரக் என அனைத்து வாகனங்களிலும் இதே செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த செட்-அப் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடது என அது இடம் பெறும் பக்கங்களில் வேண்டுமானாலும் மாறுப்பட்டுக் காணப்படும், ஆனால், அது கால்களால் கட்டுப்படுத்தும் வகையில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும். இந்த மாதிரியான சூழலில் எதிர்காலத்தில் இந்த பெடல்கள் கார்களின் அடிப்பகுதியில் இடம் பெறாது என்பது தெரிய வந்திருக்கின்றது.
அதாவது, கால்கள் வாயிலாக மட்டுமே காரின் பிரேக் மற்றும் ஆக்சரலரேஷனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இருக்கும் சூழலை கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று மாற்ற திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஓர் புதிய தகவலை வெளியிட்டு இருக்கின்றது.

பிரபல ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டாவே அந்த நிறுவனம் ஆகும். நிறுவனம் சமீபத்தில் அதன் அப்டேட் செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை வெளியுலகிற்கு காட்சிப்படுத்தியது. இந்த காரில் அது நியோ ஸ்டீர் (Neo Steer) எனும் புதிய வகை ஸ்டியரிங் வீலை அது பயன்படுத்தி இருக்கின்றது.
பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஓர் ஸ்டியரிங் வீலே இது ஆகும். இந்த ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல் பொத்தான்களை டொயோட்டா வழங்கி இருக்கின்றது. அதுதவிர, பிரேக் மற்றும் ஆக்சலரேஷன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சிறிய கன்ட்ரோலும் இந்த வீலிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன.

இது முற்றிலும் தனித்துவமான செட்-அப் ஆகும். இந்த செட்-அப்பை வேறு எந்த கார்களிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, பயணிகள் வாகனத்தில் ஸ்டியரிங் வீலில் பிரேக் மற்றும் ஆக்சலரேஷன் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பைக்குகளின் கன்ட்ரோல்களைத் தழுவியே இந்த ஸ்டியரிங் வீலை டொயோட்டா நிறுவனம் கன்செப்டாக தயார் செய்திருக்கின்றது.
காரின் தரை பகுதியில் எந்த கன்ட்ரோலும் இல்லாத நிலையே தென்படுகின்றது. எனவே, கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளாலும் இந்த காரை பயன்படுத்த முடியும் என்பது துள்ளியமாக தெரிகின்றது. மேலும், உயரம் குறைவாக இருப்பவர்களாலும் இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே டொயோட்டா புதிய நியோ ஸ்டீர் ஸ்டியரிங் வீலை உருவாக்கி இருக்கின்றது.
விரல் நுனியில் அனைத்து கன்ட்ரோல்களும் வழங்கப்பட்டு இருப்பதால் கால்களுக்கான தேவை முற்றிலுமாக இந்த காரில் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, துடிப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கிலும் இந்த புதிய ஸ்டியரிங் வீலை டொயோட்டா தயார் செய்திருக்கின்றது. ஆனால், இந்த அம்சத்தை அது நடைமுறை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என்பது பற்றிய தகவலை வெளியிடவில்லை.
வெகு விரைவில் இந்த அம்சம் அதன் பிரபல கார் மாடல்களில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முதலில் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான லேண்ட் க்ரூஸரிலேயே அது இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய பணக்காரர்கள் தொடங்கி உலக பணக்காரர்கள் வரை பலரின் பிரியமான கார் மாடலாக லேண்ட் க்ரூஸர் இருப்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இந்த புதிய கான்செப்ட்டை நடைபெற்று வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இந்த உலக புகழ்பெற்ற வாகன ஷோவில் நிறுவனம் அதன் இன்னும் பல தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது. அந்தவகையில், மின்சார கான்செப்ட்டுகளையும் அது அதிகளவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









